“அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” – ரோமர் 8:15
பயமானது நம் வாழ்க்கையிலே ஒரு வல்லமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது எதிரியின் விசுவாச புரட்டுதலாகும். அவன் நம்மிடம் நான் சொல்வதை நம்புங்கள் என்று சொல்வான். இது சரிபடாது, உங்கள் ஜெபம் போதுமானதாக இல்லை. தேவனுக்கும் உங்களுக்கும் உறவு சரியாக இல்லை, நீங்கள் ஒரு தோல்வி என்பான்.
பயம் எப்போதுமே நீங்கள் யாராக இல்லையோ, உங்களிடம் எது இல்லையோ, உங்களால் எதை செய்ய இயலாதோ, நீங்கள் எப்படியாக இருக்க மாட்டீர்களோ அதையே சொல்லும். ஆனால் ரோமர் 8:15, நீங்கள் அப்பா, பிதாவே என்று அழைக்கக்கூடிய புத்திர சுவீகாரத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்று கூறுகிறது.
சிறு பிள்ளைகள் தங்கள் தகப்பனை அழைக்கும் முறை அதுவே, அந்த குழந்தைக்கும் தகப்பனுக்கும் உள்ள நெருக்கத்தையும் குறிக்கிறதாக இருக்கிறது. இயேசு நாம் தேவனை ‘அப்பா’ என்று அழைக்கலாம் என்று சொன்னார். ஏனென்றால் அவர் நம்மை எல்லா பயங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறார். அவர் எப்போதுமே தம்முடைய அன்பார்ந்த பிள்ளைகளை பொறுப்பாக கவனித்துக் கொள்வார்.
நாம் புறக்கணிக்கப்பட்டு விடுவோம் என்ற பயமின்றி அவரை அணுகலாம். எந்தவொரு பிரச்சினயோடும், வேதனையோடும் அவரிடம் செல்லும் போது, நம்மை தேற்றவும் உற்சாகப்படுத்தவும் திறந்த கரத்தோடு காத்திருக்கிறார்.
ஜெபம்
அப்பா, பிதாவே, என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றுகிறதற்காக உமக்கு நன்றி. நீர் என்னை பாதுகாத்துக் கொள்வீர் என்று அறிந்திருப்பதால், பயத்தோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை, உம்மை நேசிக்கின்றேன்!