ஆமாம் உங்களால் இயலும்!

ஆமாம் உங்களால் இயலும்!

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். – 1 கொரிந்தியர் 10:13

நாம் அனைவருமே சோதனைகளை எதிர்நோக்குகிறோம். நம் வாழ்விலே அது தவிர்க்கப்பட இயலாதது. நீங்கள் சோதிக்கப்படுவீர்களா என்பது கேள்வியல்ல. கேள்வி என்னவென்றால் நீங்கள் சோதிக்கப்பட ஆயத்தமாய் இருக்கிறீர்களா?

நீங்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களால் சோதனையை முறியடிக்க இயலும். ஜாய்ஸ், என்னால் இயலும் என்று நான் நினைக்கவில்லை என்று சொல்வதை நிறுத்துங்கள். என்னால் இயலாது என்பதை உங்கள் வார்த்தை தொகுப்பில் இருந்து நீக்கி விடுங்கள்.

உங்களுடைய சொந்த பெலத்தில், உங்களுடைய சொந்த திறனாலே உங்களால் இயலாது. அது சரிதான். ஆனால் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்திலே வைக்கும் போதும் அவருடைய பெலத்தை சார்ந்திருக்கும் போதும், அவர் வாக்குத்தத்தங்களை நம்பும் போதும் உங்களால் மேற்கொள்ள இயலாத எந்த சோதனையும் இல்லை.

பல வருடங்களாக சோதனைகளை மேற்கொள்வதில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஐந்து காரியங்களை நான் கவனித்திருக்கிறேன். முதலாவதாக நீங்கள் ஞானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் தேர்வுகளை பற்றியும், தெரிந்துகொள்ளுதல் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். ஞானம் முன்னோக்கி பார்க்கிறது.

அடுத்ததாக, சோதனையை உங்களால் எதிர்க்க முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டும். ஆக்கினை தீர்ப்பும், குற்ற உணர்வும், வெட்கமும் வேகமாகத் தோன்றும். அவற்றை நீங்கள் ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவீர்கள் என்றால் அவை பெலனிழந்து விடும். ஆனால், அவை தொடங்கிவிட்டது என்றால் அதை நிறுத்துவது அதிக கடினம். மூன்றாவதாக சோதனையை சந்திப்பது சாதாரணமானது என்று எண்ணுங்கள். ஒரு போராட்டத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள் என்றால் நீங்கள் எப்போதுமே அதற்கு ஆயத்தமாய் இருப்பீர்கள். நான்காவதாக பலவீனமான இடங்களை தவிர்த்து விடுங்கள். சீக்கிரமாகவே விழுந்து விடக்கூடிய இடத்திலே இருக்காதீர். உங்கள் பணத்தை சரியாக கையாளுவதில் போராடி கொண்டிருப்பீர்கள் என்றால் உங்களால் வாங்க இயலாத சமயங்களில் கடைவீதிக்கு போவதை தவிர்த்து விடுங்கள்.

இறுதியாக, உங்களைப் பற்றி மேன்மையாக எண்ணிக் கொள்ளாதீர்கள். நாம் சோதிக்கப்படுவதால் பட்டம் பெறுவதில்லை. நாம் தடுமாற கூடாத அளவு முதிர்ச்சி அடைந்து விட்டோமென்று எண்ணிக் கொள்வது சுலபமானது. அப்படி அது நடக்கும் என்றால் நீங்கள் எளிதாக தாக்கப்படுவீர்கள்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனே உங்களை வெற்றி பெறச் செய்ய, அவரை நம்ப வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய கிருபையால்… உங்களால் இயலும்!


ஜெபம்

தேவனே, சோதனையானது வாழ்க்கையின் ஒருபகுதி என்று நான் உணர்கிறேன். சோதனை வரும்போது நான் ஆயத்தம் அற்ற நிலையில் இல்லாமலும், அதனால் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கப் படாமலும் இருக்க உதவும். எத்தகைய சோதனையையும் நான் மேற்கொண்டு உம்முடைய வெற்றியிலே வாழ எனக்கு நீர் கொடுக்கும் ஞானத்திற்காகவும், கிருபைக்காகவும் நன்றி செலுத்துகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon