நாம் அனைவரும் தத்தெடுக்கப்பட்டிருக்கிறோம்

நாம் அனைவரும் தத்தெடுக்கப்பட்டிருக்கிறோம்

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக. (எபேசியர் 1:4–5)

நான், என் கணவர் டேவைச் சந்தித்தபோது, எனக்கு இருபத்து மூன்று வயது. ஒன்பது மாதக் குழந்தையுடன், என் முதல் கணவர் என்னைக் கைவிட்டதால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

டேவ், என்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கேட்டபோது, நான் இவ்வாறு சொன்னேன், “சரி, எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டால் அவனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று.

டேவ் என்னிடம், அதற்கு அற்புதமான ஒன்றைச் சொன்னார்: “உன் மகனை எனக்கு நன்றாகத் தெரியாது, ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று எனக்குத் தெரியும், மேலும் உங்களில் ஒரு பகுதியாக இருக்கும் எதையும் அல்லது யாரையும் நான் நேசிப்பேன்.”

டேவிட் தத்தெடுக்கப்பட்டதைக் கண்டு மக்கள் முற்றிலும் ஆச்சரியப்படுகிறார்கள். டேவின் மரபணுக்கள் எதுவும் அவனிடம் இல்லா விட்டாலும், அவன் தனது அப்பாவைப் போலவே இருக்கிறான் என்பதை அவர்கள் தொடர்ந்து அவனிடம் கூறுகிறார்கள்.

கடவுள் நம்மைத் தம்முடையவர்களாக ஏற்றுக்கொள்ளும்போது, குறிப்பிடத்தக்க வழிகளில் அவரை நாம் ஒத்திருக்க, அவர் நமக்கு உதவ விரும்புகிறார். நாம் தத்தெடுக்கப்படுவதற்கு முன்பு அவரைப் போல இல்லை, ஆனால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் பண்புகளை எடுத்துக் கொள்ளத் தொடங்குவது போல, அவருடனான நமது உறவில் நாம் வளரும்போது கடவுளின் பண்புகளை எடுத்துக் கொள்ள தொடங்குகிறோம்.

நான் கடவுளின் குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட போது, நான் என் பரலோகத் தகப்பனைப் போல் எதுவும் செய்யவில்லை, ஆனால் நான் சில ஆண்டுகளில் மாறிவிட்டேன், இப்போது மக்கள் என்னில் என் பிதாவின் அம்சங்களைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். நான் அன்பு, பொறுமை, மற்றவர்களிடம் கருணை, நன்றியுணர்வு மற்றும் பல விஷயங்களில் வளர்ந்துள்ளேன். உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் விரும்புபவர்களின் வாழ்க்கையிலும் அதே மாற்றங்களைக் கொண்டு வர கடவுள் விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் தினமும் கடவுளின் சாயலாக வடிவமைக்கப்படுகிறீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon