ஆவியானவர் vs மாம்சம்

ஆவியானவர் vs மாம்சம்

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். (கலாத்தியர் 5:16)

தன் எஜமானரின் குரலுக்கு எப்பொழுதும் செவி சாய்க்கப் பயிற்றுவிக்கப்பட்ட குதிரையைப் போல, நம்மிடம் ஒத்துப் போகும் நபர்களிடம் மட்டுமல்ல, அவருடைய எல்லா வழிநடத்துதலிலும் கர்த்தரைப் பின்பற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். அவர் சொல்வதை நாம் எப்போதும் விரும்ப மாட்டோம்.

கடவுளைப் பின்பற்றுவதற்கு, சில சமயங்களில் மாம்சத்திற்கு “இல்லை” என்று சொல்லப்பட வேண்டும், அப்படி செய்யும் போது, மாம்சம் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். சில சமயங்களில் நாம் ஒரு திசையில் முழு வேகத்தில் ஓடும்போது திடீரென்று மாஸ்டர் உங்களை நிறுத்தச் சொல்லி மற்றொரு திசையில் செல்லும்படி அறிவுறுத்துகிறார். நாம் நம் வழி எது என்பதை தேவனிடமிருந்து பெறாதபோது அது நமக்கு வேதனையாக இருக்கிறது, ஆனால் இறுதியில் தேவனின் வழிகள் எப்போதும் சிறந்தவை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

இன்றைய வசனத்தில், அப்போஸ்தலன் பவுல், ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையிலான போராட்ட்த்தைப் பற்றி எழுதுகிறார். நாம் ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றினால், தேவன் வைத்திருக்கும் சிறந்தவற்றிலிருந்து நம்மை திசை திருப்பும் மாம்சத்தின் விருப்பங்களை நாம் திருப்திப்படுத்தவோ அல்லது நிறைவேற்றவோ மாட்டோம். மாம்ச இச்சைகள் நீங்கும் என்று இந்த வசனம் கூறவில்லை; நாம் எப்போதும் அவைகளுடன் மல்யுத்தம் செய்ய வேண்டும். ஆனால் நாம் ஆவியானவரால் வழிநடத்தப்படுவதைத் தேர்ந்தெடுத்தால், மாம்ச இச்சைகளை நிறைவேற்ற மாட்டோம் – பிசாசு நம் வழியில் வர மாட்டான்.

நாம் தேவனின் வழிநடத்துதலைப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கும்போது நமக்குள் ஒரு போர் நடப்பதை போல் உணருவோம். நம்முடைய மாம்சமும், கடவுளின் பரிசுத்த ஆவியும் பொதுவாக ஒத்துப்போவதில்லை, மேலும் மாம்சத்தை நன்றாக வைத்திருக்க நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், நாம் அனைவரும் கடவுளின் பரிசுத்த ஆவிக்கு அடிபணியவும், மாம்ச இச்சைகள் மற்றும் சோதனைகளை வெல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மாம்சம் உங்களை வழிநடத்த அனுமதிக்காதீர்கள், ஆனால் நீங்கள் கடவுளின் ஆவியால் வழிநடத்தப்பட வேண்டுமென்பதை இன்று தீர்மானிக்கவும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களுக்கு சிறந்ததை கொடுக்க விரும்புகிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon