
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத்தியர் 5:22-23)
நாம் பரிசுத்த ஆவியால் நிரம்பி வழியும் போது, அவருடைய பெலன் நம் மூலம் வெளிப்படுவதைக் காண்கிறோம். நம்மிடம் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும், நாம் மக்களுக்கு நல்லவர்களாக இருப்போம். இயேசு நம்மை நேசித்தது போல், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். இந்த அன்பு வெளிப்படுவதை உலகம் பார்ப்பது முக்கியம். உலக மக்கள் சத்தியத்திற்காக பசியுடன் இருக்கிறார்கள். கடவுள், மக்களை மாற்ற முடியும் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்கு பசியும், தாகமும் உண்டாக, கடவுளின் அன்பை, அவர்கள் செயலில் பார்க்க வேண்டும்.
நாம் ஒளியாகவும், உப்பாகவும் இருக்க வேண்டும் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது (பார்க்க மத்தேயு 5:13-14). உலகம் இருளில் உள்ளது. ஆனால் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவர்கள், தாங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் ஒளியைக் கொண்டு வருகிறார்கள். உலகம் சுவையற்றது, ஆனால் கிறிஸ்தவர்கள், உப்பை (சுவை) மற்றவர்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து அவர்களை உயிர்ப்பிக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு பெரிய வேலை இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர், நாம் மக்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார் என்பதைப் பற்றிய உணர்திறன் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். கடவுள் இந்த உலகிற்கு தனது வேண்டுகோளை நம் மூலம் வைக்கிறார்; நாம் அவருடைய தனிப்பட்ட பிரதிநிதிகள் (பார்க்க 2 கொரிந்தியர் 5:20). அந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, நமக்கு அளிக்கப்படும் தெய்வீக தயவை நாம் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார். நாம் கடவுளை மகிமைப்படுத்தும் விதமாகவும், மக்களை அவரிடம் ஈர்க்கும் விதமாகவும் நடந்து கொள்ள, ஆவியின் கனியை முழு அளவில் வளர்க்க நாம் பரிசுத்த ஆவியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நாம், வாழ்க்கையில் கஷ்டங்களைச் சந்திக்கும்போதும், கடவுளுடைய உதவியோடு, அவர் எப்படி மக்களை நடத்துகிறாரோ அப்படி நடத்தும் போதும் ஆவியின் பலன் உருவாகிறது. கர்த்தரில் பலமாக இருங்கள். உலகம் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். அவர்களுக்கு நீங்கள் உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று நீங்கள் என்ன சவால்களை எதிர்கொண்டாலும், நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் தொடர்ந்து அன்பாக இருங்கள்.