தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:24)
நாம் ஆவியின் மூலம் கடவுளோடு தொடர்பு கொள்கிறோம். நாம் கடவுளை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும் என்று இன்றைய நம் வசனத்தில் இயேசு சொன்னார். கடவுளுடன் முழுமையாகவும், உண்மையாகவும் இருப்பது, அவருடன் நெருக்கத்தை வளர்க்கும் வழிகளில் ஒன்றாகும். எப்படியும் அவர் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எனவே அவருடன் முற்றிலும் நேர்மையாக இல்லாமலிருக்க எந்த காரணமும் இல்லை. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், நீங்கள் என்ன தவறு செய்தீர்கள், உங்கள் ஆசைகள் என்ன என்பதை அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் ஒரு நல்ல, நம்பகமான நண்பரைப் போல் கடவுளிடம் நேர்மையாகப் பேசுங்கள்.
நான் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை என்று அவரிடம் நேர்மையாகச் சொல்கிறேன், ஆனால் அவருக்குக் கீழ்ப்படிந்து, நான் அவரை நேசிப்பதால் அதைச் செய்வேன். பாசாங்கும், கடவுளுடன் நெருங்கிய உறவும் ஒன்றாக செல்லாது. என்னுடைய தோழி ஒருமுறை என்னிடம் சொன்னாள். அவள், கடவுளுடைய ராஜ்யத்திற்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தாலும், அவள் உண்மையில் விரும்பவில்லை என்று. அவள் கடவுளிடம் நேர்மையாக இருந்தாள், “நான் அதைச் செய்வேன், ஆனால் எனக்கு உண்மையில் விருப்பமில்லை, அதனால் கொடுப்பதற்கான ஆசையைக் எனக்குக் கொடுக்க உம்மிடம் கேட்கிறேன்” என்று சொன்னாள். இந்த பெண் இறுதியில் மிகவும் தாராளமாகி அதை மகிழ்ச்சியுடன் செய்தாள்.
சத்தியம் மட்டுமே நம்மை விடுதலையாக்கும் (பார்க்க யோவான் 8:32). கடவுளுடைய வார்த்தை சத்தியம். அவர் சொல்வதை அவர் உண்மையாய் சொல்கிறார், அவர் சொல்வதை அர்த்தத்தோடு சொல்கிறார். நாம் ஏதாவது தவறு செய்யும் போது, அதைப் பற்றி கடவுளிடம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். அது என்ன பாவமாக இருந்தாலும். நீங்கள் பேராசையுடன் இருந்தால், அதை பேராசை என்று அழைக்கவும். நீங்கள் பொறாமையுடன் இருந்தால், அதை பொறாமை என்று அழைக்கவும். நீங்கள் பொய் சொன்னால், அதை பொய் என்று சொல்லுங்கள். கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, விசுவாசத்தால் அதைப் பெறுங்கள்.
நாம் கடவுளை ஆராதிக்கும்போது, ஆவியிலிருந்து அவ்வாறு செய்ய வேண்டும். மேலும் அதை எல்லா உண்மை மற்றும் நேர்மையுடன் செய்ய வேண்டும். ஒரு நண்பர் பொய்யாக இருப்பதாக நாம் உணர்ந்தால், “உண்மையாய் இருங்கள் ” என்று நாம் அடிக்கடி அவரிடம் கூறுகிறோம். அதாவது பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டு நேர்மையாக இருக்குமாறு அவர்களிடம் கேட்கிறோம். கடவுள் நம்மிடமிருந்து அதையே விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உண்மையாக இரு!