“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.” – மத் 7:1
ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்க நேரிடும் ஆயிரக்கணக்கான காரியங்களெல்லாம் சரியானதும் அல்ல, தவறானதும் அல்ல. ஆனால் வெறும் தனிப்பட்ட தேர்வுகளாகும். எந்தவொரு வெளிப்பிரகாரமான காரியங்களின் குறிக்கிடுதலும் இல்லாமல் தாங்களாகவே உரிமையோடு எடுக்கும் முடிவுகள் / தேர்வுகள்
மக்களுடைய மனங்களிலே நியாயந்தீர்க்கும், குறை கூறும் எண்ணங்களை வைக்க குட்டி சாத்தான்களை ஏவி விடுவதில் சாத்தான் மும்முரமாக இருக்கிறான். ஒரு பூங்காவிலோ. கடை வீதியிலோ அமர்ந்தவளாக, அங்கேயிருக்கும் ஒவ்வொருவரைப் பார்த்து அவர்கள் உடையலங்காரம், சிகையலங்காரம், துணைவர்கள் போன்றவற்றைப் பற்றி என் மனதிலே ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு பொழுதைப் போக்கின காலங்களை என்னால் நினைத்துப் பார்க்க இயலும்.
ஆனால் மக்களை இவ்விதமாக நியாயந்தீர்ப்பது தவறு என்று வேதம் சொல்கிறது. ஒன்றைப் பற்றிய கருத்துகளை கொண்டிருப்பதை நம்மால் எப்போதுமே தடுக்க இயலாது, அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிறர் நம்மைப் போன்ற தேர்வுகளை கொண்டிராததால் அவர்களிடம் ஏதோ தவறிருக்கிறது என்று நாம் எண்ணும் அந்த நொடிப்பொழுதில்தானே பிறரை நியாயந்தீர்க்கும் பிரச்சினையைக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழ்னிலைகளிலே, நான், ‘ஜாய்ஸ், இது உன் வேலையல்ல’ என்று என்னிடமே சொல்லிக் கொள்வேன்.
உங்களுக்குள்ளே சேதம் விளைவிக்கும் நியாய்த்தீர்ப்புகளை வளர விடாதீர்கள். மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் வித்தியாசமானவர்களாக சிருஷ்டித்திருக்கிறார். வேறு விதமாக மக்கள் சிதிப்பார்களேயென்றாலும் அது சரியே என்று உணர்ந்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது ‘இது என் வேலையில்லை’ என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, நான் பிறரை நியாயந்தீர்க்கவோ, குறை கூறவோ விரும்பவில்லை. என்னை விட வித்தியாசமான கருத்துக்களையும், தனிப்பட்ட தேர்வுகளையும் கொண்டவர்களையும் நான் சந்திக்கும் போது உம்முடைய பார்வையின் மூலமாக அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கருத்துக்களை விட என்னுடைய கருத்துக்கள் முக்கியமில்லை என்று நினைத்துக் கொள்ள எனக்கு தயவு செய்து உதவுவீராக.