
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.” – நீதி 2:6
நம் உணர்ச்சிகளை, நம் வாழ்க்கையை நடத்த அனுமதிக்கும் போது, வாழ்க்கை சுவாரசியமாக இருப்பதில்லை. உணர்ச்சிகள் நாளுக்கு நாள், மணிக்கு மணி, ஏன் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டேயிருக்கும். அவை அனேகந்தரம் நம்மை ஏமாற்றுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் உணர்ச்சிகளை நம்மால் நம்ப இயலாது.
ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக, தவறான உணர்ச்சிகளை கண்டு கொள்ளாமல் சத்தியத்தாலும், ஞானத்தாலும் வாழ்வதைத் தெரிந்து கொள்ளலாம். சில உதாரணங்களை நான் உங்களுக்கு கொடுக்கட்டும்.
ஒருவேளை ஒரு குழுவில் நீங்கள் இருக்கலாம். ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாக உணரலாம். அதனால் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று அர்த்தமாகாது. ஒருவேளை ஒருவரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்பதாக உணரலாம். ஆனால் அப்படியாக இல்லை. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் கூட உணரலாம். ஆனால் நீங்கள் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. இவைகளெல்லாம் வெறும் உணர்ச்சிகள் மட்டுமே.
நாம் முதிர்ச்சியடைந்தவர்களாக, ஒழுக்கக்கட்டுப்பாடுள்ளவர்களாக, ஆவியிலே நடக்க தீர்மாணித்தவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய காரியங்களை செய்ய விருப்பத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அவ்வப்போது எதிர்மறையான உணர்ச்சிகளால் மோதி அலைந்தாலும், அந்த உணர்ச்சிகள் நம்மை கட்டுப்படுத்தி நம் வாழ்க்கையை கெடுக்க அனுமதிக்க கூடாது. மாறாக உண்மையை, தேவனுக்கேற்ற ஞானத்தை, அறிவை, உணர்வை பின்தொடர தெரிந்து கொள்ளலாம்.
ஜெபம்
தேவனே, என் உணர்ச்சிகள் அடிக்கடி உம்முடைய ஞானத்திற்கு எதிராக சென்று என்னை ஏமாற்ற முயற்சிக்கின்றது. ஆனால், அவை, என் வாழ்க்கையை நடத்த அனுமதிக்க மாட்டேன். என்னுடைய மாறும் உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படாமல் உம்மோடு தொடர்பிலிருக்கும் படி உம்முடைய சத்தியத்தால் என்னை நடத்துவீராக.