
ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. (சங்கீதம் 38:9)
கடவுள் தம்முடைய வார்த்தையில் இவ்வாறு கூறுகிறார். நாம் அவரில் மகிழ்ச்சியடைவோமானால், அவர் நம்முடைய இருதயத்தின் இரகசிய ஆசைகளையும், விண்ணப்பங்களையும் நமக்குத் தருவார் (சங்கீதம் 37:4 ஐப் பார்க்கவும்). நான் அதை விரும்புகிறேன். ஏனென்றால் நான் விரும்பிய காரியங்களை நானே பெற முயற்சித்து, விரக்தியடைந்து பல ஆண்டுகள் அவ்வாறு கழித்தேன். காரியங்களைத் தேடும் செயல்பாட்டில், நாம் பெரும்பாலும் கடவுளைத் தொடரத் தவறிவிடுகிறோம். அவரைப் பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு, ஊழியத்தில் இருக்க வேண்டும் என்ற என்னுடைய பலமான ஆசையின் காரணமாக நான், ஒன்று நடப்பதற்கு அனுமதித்தேன். உலகில் மிக முக்கியமான காரியம், கடவுளுக்காக ஊழியம் செய்வதே என்று நான் நினைத்தேன். ஆனால் அது கடவுளை விட முக்கியமானது அல்ல என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் ஆசைகளை சமநிலையில் வைத்து, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளில் உங்களை மகிழ்விக்கிறீர்களா? இல்லையெனில், உண்மையிலேயே முக்கியமானது எது என்பதை நினைவூட்டுவதன் மூலம் நீங்கள் எளிதாக உங்களை சரிசெய்யலாம். உங்களது அனைத்து ஆசைகளையும் கடவுளுக்கு முன்பாக வைக்கவும். இன்றைய நமது வேத வசனம் நமக்கு அறிவுறுத்துவது போல, அவருக்கு சித்தமில்லாத எதையும் உங்களிலிருந்து நீக்குவதற்கு அவரை நம்புங்கள்.
எல்லா ஆசையும் கடவுளிடமிருந்து வருவதில்லை. எனவே நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசையும் நிறைவேற்றப்படாது. ஆனால் நம் நன்மைக்காக செயல்படும் ஒன்றை கடவுள் கொடுப்பார் என்று நாம் நம்பலாம். நீங்கள் ஒன்றைக் கேட்டும், அது கிடைக்கவில்லையென்றால், அவர் உங்களுக்காக மிகவும் சிறப்பான ஒன்றை மனதில் வைத்திருப்பதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். எனவே இளைப்பாறுங்கள்; கடவுளில் உங்களை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள், மீதமுள்ளவற்றை அவர் கவனித்துக் கொள்ளட்டும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்களுக்கான உங்கள் திட்டங்களை விட கடவுளின் திட்டங்கள் சிறந்தவை.