
“மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.” – சங்கீதம் 103:12
பிதா, நம் குழப்பங்களையெல்லாம் மாற்ற அனுமதிக்கும் போது, அவற்றையெல்லாம் அற்புதங்களாக மாற்றும் திறன் அவரிடமிருக்கிறது. நம் தவறுகளை நலனுக்காக உப்யோகிப்பார்.
ஏசாயா 61:3 சொல்கிறது, நம் சாம்பலுக்கு பதில் சிங்காரத்தைக் கொடுக்கிறார் என்று. ஆனால் அனேகர் தங்கள் சாம்பலையே விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறதை காண்கிறேன். அவர்களின் தோல்விகளை, தவறுகளை நினைவுறுத்த கடந்த காலத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் சாம்பலை விட்டு விட்டு ஏதாவது புதியதைத் தொடர உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
அனேகர், மற்றொரு தருணம் தங்களுக்கு கிடைக்காது என்று உணர்ந்தவர்களாக கடந்த காலத்திலே வாழ்கின்றனர். உங்களுக்கு இரண்டாம் தருணம் வேண்டுமா? தேவனிடம் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து…தருணங்கள் உள்ளது. உங்களுக்கு எது வேண்டுமோ அதை கேளுங்கள். தேவன் நீடிய பொறுமையாலும், இரக்கத்தாலும் நிறைந்திருக்கிறார். அவரது அன்பான இரக்கங்கள் மாறாது, அதற்கு முடிவில்லை. அவர் உங்கள் மீறுதல்களையெல்லாம் உங்களை விட்டு விலக்கி விட்டார் என்று வேதம் சொல்கிறது. எனவே அவற்றை இன்னும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இயேசு பாரங்களை நீக்கவே வந்தார். ஆனால் நீங்கள் அவற்றை விட்டு விடவும். உங்கள் தவறுகளை விட அவர் மேலானவராக இருக்கிறார் என்பதை நம்ப விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்
தேவனே, நீர் எனக்காக ஒரு புத்தம் புதிய தருணத்தை வைத்துக் கொண்டு அன்புடன் நிற்கையில், என் கடந்த காலத்தைப் பற்றிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே என் சாம்பலை நான் விட்டு விடுகிறேன். அவற்றிலிருந்து நீர் எத்தகைய சிங்காசனத்தை கொண்டு வருகிறீர் என்று காணும் சந்தோசத்திலே அவற்றையெல்லாம் உம்மிடம் கொடுக்கிறேன்.