“உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.” – பிலே 1:6
உங்களைப் பற்றி மேன்மையாக நீங்கள் எண்ணிக் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உங்கள் சுய அங்கீகாரத்தையும், கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்ற தன்னம்பிக்கையையும் அதிகரிக்க ஐந்து நடைமுறை குறிப்புகள் இதோ:
- உங்களைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையாக பேசாதீர்கள். உங்கள் பெலவீனங்களையும், குறைவுகளையும் நோக்குவதில் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மூலமாக உங்களுக்குள்ளிருக்கும் ஒவ்வொரு நல்ல காரியத்தையும் அங்கீகரித்துக் கொள்வதின் மூலமாகவே உங்கள் விசுவாசம் பலனுள்ளதாக மாறுகிறது.
- பிறருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். பேதுரு தன்னை மற்றொரு சீஷனோடு ஒப்பிட்ட போது இந்த தடங்களை எதிர் கொண்டான். அவன் தேவனே இவனைப் பற்றி என்ன என்றான். இயேசு பிரதியுத்திரமாக, ‘நான் வரும் வரை அவன் உயிரோடிருந்தால் உனக்கென்ன என்றார். (யோவாண் 21:21-22). நாம் ஒப்பிட்டுக் கொள்ளும் படி அழைக்கப்படவில்லை. ஒத்துப்போகவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- தேவனே உங்கள் தகுதியை தீர்மாணிக்கட்டும். இயேசுவினாலே நீங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறீர்களென்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- உங்கள் குறைகளை சரியாகப் பாருங்கள். எங்கள் எந்தப் பகுதியிலே முன்னேற வேண்டுமென்பதை பார்ப்பது நல்லதே. ஆனால் உங்கள் முன்னேற்றத்தை பாராட்ட மறந்து விடாதீர்.
- நம்பிக்கையான, உண்மையான ஊற்றை கண்டு பிடியுங்கள். தேவன் மேல் உங்கள் நம்பிக்கையை வைப்பீர்கள் என்றால், ஒரு ஆரோக்கியமான மன நிலையை பெற்றுக் கொள்வீர்கள். உங்களால் இயன்றதை சிறப்பாக செய்யுங்கள். பலனை அவரிடம் விட்டு விடுங்கள்.
ஜெபம்
தேவனே, என்னை நானே ஏற்றுக் கொள்ள கஷ்டப்படும் போது என்னை நீர் ஏற்றுக் கொள்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மை நம்புகையிலே எனக்கு நீர் கொடுத்திருக்கும் நல்ல காரியங்களை அங்கீகரித்துக் கொண்டு என்னுடைய குறைகளையெல்லாம் சரியான பார்வையிலே பார்க்கும் படி செய்வீராக