“நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,” – கொலோ 3:23
தேவன் உங்களை பெரிய திறமைகளுடன் சிருஷ்டித்து இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அங்கே தானே நீங்கள் நின்று விட முடியாது. உங்கள் திறமைகளை நீங்கள் வளர்க்க வேண்டும்.
அனேக மக்கள் தங்கள் திறமைகளைப் பற்றி எதுவும் செய்யாமல் இருப்பதால் சந்தோசமின்றி இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். உங்கள் திறன்களெல்லாம் முழுமையாக வளர வேண்டும் என்றால், எல்லாம் பரிபூரணமாய் இருக்கும் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே ஏதோ ஒன்றை செய்யுங்கள். உங்களுக்கு எதிராக இருக்கும் ஏதோ ஒன்றை செய்ய தொடங்குங்கள்.
உங்கள் திறமைகளைக் கொண்டு ஒன்றை செய்வதன் மூலம் அதற்கு ஏதோ ஒரு வடிவம் கொடுக்க வேண்டும். ஒரு புதிய காரியத்தை முயன்று பார்க்க உங்கள் இருதயத்திலே விருப்பம் இருக்கும் என்றால், அதை செய்ய தேவன் உங்களுக்கு திறமை அளித்திருக்கிறார் என்பதை முயன்று கண்டறியுங்கள். நீங்கள் எதையும் முயற்சி செய்து பார்க்காமல் இருப்பீர்கள் என்றால், உங்களால் என்ன செய்ய இயலும் என்பதை ஒரு போதும் கண்டுபிடிக்கவே மாட்டீர்கள்.
உங்கள் திறமைகளை வளர்க்க விசுவாச அடி எடுத்து வைக்கும்போது, பயத்திற்கு எதிர்த்து நில்லுங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். தேவனுடைய பரிபூரணமான அன்பு பயத்தை புறம்பே தள்ளி விடுகிறது. எனவே தோல்வி என்ற பயத்தாலும், தவறு செய்து விடுவோம் என்ற பயத்துடனும் நாம் செயலிழந்து வாழ வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு பிரத்தியட்சமான வசதிக்கோட்பாட்டுக்குள் வாழ்வதே பாதுகாப்பானதைப் போன்று தோன்றலாம். ஆனால் உங்களுடைய முழு திறமையையும் வளர்ப்பதிலோ அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதிலே நிறைவையோ ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். எனவே தேவன் நீங்கள் செய்யும்படி உங்களை நடத்தும் காரியத்தை செய்ய தீர்மானியுங்கள்.
நீங்கள் தேவன் கொடுத்திருக்கும் திறமைகளால் நிறைந்து இருக்கின்றீர்கள். நீங்கள் நினைத்துப் பார்ப்பதற்கும் மேலாக உங்கள் வாழ்க்கையின் மூலம் அதிகம் செய்ய விரும்புகிறார். ஆனால் அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. இன்று அவரை முழு இருதயத்தோடும் சேவிக்க தொடங்குங்கள்.
ஜெபம்
தேவனே, நான் செய்யும் எல்லாவற்றிலும் முழு இருதயத்தோடு சேவிக்க விரும்புகிறேன். நான் எழுந்து செயல்பட்டு, நீர் எனக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய திறமைகளை வளர்க்க என்னை உற்சாக படுத்துகிறதற்காக உமக்கு நன்றி.