
“ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.” – அப் 17:28
அன்பே வாழ்வின் பெலனாகும். அதுதான் மக்களை ஒவ்வொரு நாளும் எழுந்து செயல் பட வைக்கிறது. அது வாழ்க்கைக்கான நோக்கத்தையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது.
மக்கள் தங்கள் வாழ்க்கையிலே பல வேளைகளில் அவர்கள் நேசிக்கப்படவில்லையென்றோ அல்லது அவர்களை நேசிக்க யாரும் இல்லையென்றோ உணர்கின்றனர். அவர்கள் இத்தகைய மன நிலையை வளர்த்திக் கொள்கின்றனர். ஏனென்றால் நண்மையானதாக தோன்றும் காரியங்களிலே மன நிறைவடைய எதிர்பார்க்கின்றனர். ஆனால் அனேக வேளைகளிலே அது அவர்களை விரக்தியடையச் செய்து விடுகின்றது.
உங்களுக்கு இப்படியாக நடந்திருக்கிறதா? நீங்கள் எப்போதும் அன்புக்காக எதிர்பார்த்து நிறைவடையாத படி உணர்கிறீர்களா? உங்களிடம் இதை நான் கேட்கட்டும். எத்தகைய அன்பைத் தொடர்கின்றீர்கள்?
நீங்கள் அன்பைத் தேடுகின்றதாக நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே நீங்கள் தேவனைத் தேடுகின்றீர்களா? ஏனென்றால் அவர் அன்பாக இருக்கின்றார். தேவனோடு தொடர்பில்லாத அத்தகைய அன்பை நீங்கள் பெற்றுக் கொண்டாலும் அது உண்மையான அன்பு இல்லை.
நாம் அவருக்குள் வாழ்கிறோம், அசைகிறோம், பிழைக்கிறோம் என்று வேதம் சொல்கிறது, அது அவரில்லாமல் வாழ்க்கை நிறைவடைகிறதில்லை என்று வேதம் சொல்கிறது.
எல்லோருமே அன்பை தேடுகின்றனர். ஆனால் தேவனுடைய அன்பை தேடுகின்றீர்களா? அது தான் உண்மையான ஒரே அன்பு, நிறைவைத் தரும் ஒரே அன்பு.
ஜெபம்
தேவனே, உம்முடைய அன்பை தொடர்ந்து சென்று நிறைவடையாமல் வாழ விரும்பேன். உம்மிடத்திலே காணப்படாவிட்டால் அது உண்மையான அன்பு இல்லை. ஏனென்றால் நீர் அன்பாக இருக்கிறீர். இன்று உம்மிடத்திலே என் அன்பைக் கண்டடைகிறேன்.