
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.. (யோவான் 4:23)
உலகம் பெரும்பாலும் ஆராதனையை “மதத்துடன் தொடர்புபடுத்தி” நினைக்கிறது. “நீங்கள் எங்கு ஆராதனை செய்கிறீர்கள்?” என்று மக்கள் கேட்டால், நாம் தேவாலயத்திற்கு எங்கு செல்கிறோம் என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். வேதத்தில் ஆராதனையைக் குறித்து நாம் படிக்கும்போது, கடவுளுடனான தனிப்பட்ட உறவைப் பற்றி படிக்கிறோம். கடவுளை முழு மனதுடன் நேசிக்கும் மற்றும் வணங்கும் மக்களிடமிருந்து ஆவிக்குறிய நெருக்கம் மற்றும் பக்தியின் உணர்ச்சி வெளிப்பாடுகள் பற்றி நாம் படிக்கிறோம். இதுவே உண்மையான வழிபாடு—நம் வாழ்வில் கடவுளுக்காக வைராக்கியமும், உற்சாகமுமாக இருப்பது. அப்படி செய்யும் போது நமக்குள் உற்சாகம் பிறக்கிறது.
இன்றைய வசனத்தின்படி, கடவுள் உண்மையாய் ஆராதனை செய்பவர்களைத் தேடுகிறார், அவர்கள் அவரை முழு இருதயத்தோடும் வணங்குவார்கள். கடவுள், உண்மையாய் ஆராதனை செய்பவர்களைத் தேட வேண்டி இருப்பதைக் குறித்து நான் வருத்தப்பட்டிருக்கிறேன். நம்மில் மிகுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்! ஆனால் அவரை, எல்லோரும் போல் வணங்குவதை அவர் விரும்பவில்லை என்பது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர் உண்மையாக ஆராதைனை செய்பவர்களை விரும்புகிறார். அவர் பயத்தினாலோ அல்லது கடமையினாலோ தன்னை வணங்கும் நபர்களைத் தேடவில்லை, மாறாக அன்பான உறவால்.
தேவாலயத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதையும், பாடல்களைப் பாடுவதையும் விட உண்மையான ஆராதனை மிக அதிகம். நம் வாழ்நாள் முழுவதும் தேவனை வணங்க வேண்டும், நாம் செய்யும் அனைத்தையும் அவருக்காகவும், அவர் மூலமாகவும் செய்ய வேண்டும். உண்மையான ஆராதனை கடவுளுடனான நெருக்கத்திலிருந்து வெளிவருகிறது. மேலும் அது அவருடைய சத்தத்தைக் கேட்டு நம்மை உணரவைக்கிறது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பயத்தால் ஆராதனை செய்யாதீர்கள்; அன்பினால் ஆராதனை செய்யுங்கள்.