உறவுடன் இருக்கும் விசுவாசியாக இருங்கள்

உறவுடன் இருக்கும் விசுவாசியாக இருங்கள்

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். (எபேசியர் 2:13)

நான் ஒரு காலத்தில் “மத விசுவாசி” என்று அழைக்கப்பட்டேன், அந்த கால கட்டத்தில், ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலை, ஒரு நெருக்கடி அல்லது கடுமையான பிரச்சனை என்று நான் உணர்ந்த போது மட்டுமே தேவனிடம் உதவி கேட்டேன். என்னால் சொந்தமாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில், நான் ஜெபித்தேன்-அதிகமாக இல்லை-ஆனால் நான் ஜெபித்தேன், ஏனென்றால் அது “மத” சம்பந்தமான விஷயம்.

நான் “ஐக்கியம் கொண்டிருக்கும் விசுவாசியாக” மாறிய பிறகு, பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஆறுதல் சொல்பவராகவும், எனது ஆசிரியராகவும், எனது நண்பராகவும், எனது உதவியாளராகவும் என்னில் வாழ்கிறார் என்பதை நான் விரைவாகக் கற்றுக்கொண்டேன் – மேலும் என் தலை முடியை சரி செய்யவும், நல்ல ஸ்கோருடன் பந்துவீசவும், நண்பருக்கு சரியான பரிசை தேர்வு செய்யவும், சரியான முடிவுகளை எடுக்கவும், அவநம்பிக்கையான சூழ்நிலைகள் மற்றும் வாழ்க்கையின் கடுமையான பிரச்சனைகளை சமாளிக்கவும், இது போன்ற எல்லாவற்றிலும் எனக்கு உதவி தேவை என்பதைக் கண்டுபிடித்தேன்.

இந்த உண்மையை நான் உண்மையில், இயேசு, எனக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தை வழங்குவதற்காக மரிக்கவில்லை, ஆனால் கடவுளுடன் ஆழமான தனிப்பட்ட உறவில் என்னைக் கொண்டு வருவதற்காக என்பதைப் புரிந்து கொண்டு, நான் ஒரு “மத விசுவாசி” என்பதில் இருந்து “உறவு விசுவாசி” ஆக மாறினேன். என்னுடைய விசுவாசம், என்னுடைய நற்செயல்களைக் கருத்தில் கொள்ளாமல் இயேசுவின் செயல்களை அடிப்படையாகக் கொண்டது. எனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கடவுளின் உதவியைப் பெறவும், அவருடைய குரலைக் கேட்கவும், அவருடன் நெருங்கிய உறவை அனுபவிக்கவும் கடவுளின் கருணையும், நன்மையும் எனக்கு ஒரு வழியைத் திறந்து விட்டதை நான் கண்டேன்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உறவினராக இருங்கள், மதம் சார்ந்தவராக அல்ல.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon