நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. (யாக்கோபு 1:4)
இன்றைய வசனம், உறுதியுடன் இருப்பதைப் பற்றி பேசுகிறது. உறுதியாக இருத்தல் என்பது நிலையாக இருப்பது; ஒரு உறுதியான நபர், என்ன நடந்தாலும் சரி, சமாதானமான மற்றும் சமமான மனநிலையுடன் இருப்பார். ஒரு உறுதியான விசுவாசி பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியும்! நாம் ஆவிக்குறிய ரீதியில் முதிர்ச்சியடைந்திருந்தால், நம் உறுதியான நிலையை பராமரிக்க முடியும். எதிரி, நமக்கு எதிராக அனுப்பும் ஒவ்வொரு சிறிய துன்புறுத்தலுக்கும் நாம் எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. அவன் நம் வழியில் எதை வீசினாலும், நாம் ஈர்க்கப்பட மாட்டோம், நாம் பயப்பட மாட்டோம், எளிதில் வருத்தப்பட மாட்டோம், நாம் விட்டு விட மாட்டோம், நாம் அசைய மாட்டோம் – நாம் உறுதியுடன் இருந்தால்.
உறுதியாகவும் அசையாமலும் இருப்பதற்கு, நாம் தேவனை நெருக்கமாக அறிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் புயல்கள் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் போது, அவருடைய சத்தத்தை நாம் கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தினாலும், இயேசுவின் இரத்தத்தினாலும் நமக்குச் சொந்தமான ஜெயிக்கும் வல்லமையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம், மேலும் பிசாசு நம்மைத் தாக்கும் காரியங்களின் மேல் நம் கவனத்தை வைப்பதை விட உறுதியான வெற்றியின் மீது நம் பார்வையை வைப்போம். நாம் அப்படி செய்யும் போது, தேவனுடைய வல்லமை நம் வாழ்வில் வெளிப்படுகிறது. இன்று நீங்கள் எதை எதிர்கொண்டாலும், கடவுள் உங்களில் விரும்பும் வேலையை அவர் பொறுமையாக செய்யட்டும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளில் உறுதியாய் இருங்கள், பிசாசுக்கு மனச்சோர்வைக் கொடுங்கள்!