தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். (சங்கீதம் 139:23-24)
பெரும்பாலும், நாம் பாவம் செய்யும்போது, தேவன் நம்முடன் இருப்பதால், நாம் வருத்தப்படுகிறோம். நமது பாவத்தை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து விலகி, மன்னிப்புக் கேட்கும் வரை, அது நம்மைச் சங்கடப்படுத்தி அதினால் வரும் அழுத்தத்தை உணர்கிறோம். நாம் கடவுளுடன் உடன்படிக்கை செய்யும் போது, நமக்கு சமாதானம் திரும்புகிறது மற்றும் நமது நடத்தை மேம்படுகிறது.
நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்காய், மீண்டும் தேவனுடன் ஐக்கியத்தை அனுபவிப்பதற்காய், நாம் ஜெபத்தில் நம்பிக்கையுடன் அவரை அணுகுவதைத் தடுக்க, பிசாசு நம்மை குற்றவுணர்வோடும், அவமானத்துடனும் இருக்க செய்கிறான். நம்மைப் பற்றி வருத்தப்படுவது அல்லது அவர் நம்மீது கோபமாக இருப்பதாக நினைப்பது ஆகியவை அவருடைய பிரசன்னத்திலிருந்து நம்மைப் பிரிக்கிறது. அவர் நம்மை விட்டு விலகுவதில்லை, ஆனால் நம்முடைய பயம் அவருடைய பிரசன்னம் இருப்பதை சந்தேகிக்க வைக்கும்.
அதனால்தான் உண்மையைப் பகுத்தறிவதும், அறிவுறுத்தப்படுதலுக்கும் குற்றவுணர்விற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வதும் மிகவும் முக்கியம். நீங்கள் அறிவுறுத்தப்படுதலுக்கு செவிசாய்த்தால், அது உங்களைப் பாவத்திலிருந்து மீட்டெடுக்கும்; குற்றவுணர்வு உங்களைப் பற்றி மோசமாக உணர வைக்கிறது மேலும் பிரச்சனையை மோசமாக்குகிறது.
நீங்கள் ஜெபிக்கும்போது, பாவ உணர்வு என்பது ஒரு ஆசீர்வாதமே தவிர, ஒரு பிரச்சனையல்ல என்பதை உணர்ந்து, உங்களுடன் பேசவும், உங்கள் பாவத்தை உங்களுக்கு உணர்த்தவும் தேவனிடம் தவறாமல் கேளுங்கள். நான் என் ஜெப நேரத்தைத் தொடங்கும் போது, நான் செய்யும் தவறுகளை வெளிப்படுத்தவும், எல்லா பாவம் மற்றும் அநீதியிலிருந்தும் என்னைச் சுத்திகரிக்கவும் என் பரலோகத் தகப்பனை எப்போதும் கேட்டுக் கொள்கிறேன். தேவனோடு ஒழுங்காக நடக்க, பாவ உணர்வு மிகவும் அவசியம். பாவ உணர்வடைவது அவர் சொல்வதைக் கேட்பதற்கான ஒரு வழி. அது உங்களைக் கண்டனம் செய்ய அனுமதிக்கும் தவறைச் செய்யாதீர்கள், ஆனால் அது உங்களை சுதந்திரம் மற்றும் கடவுளுடன் நெருக்கமான ஒரு புதிய இடத்திற்கு உயர்த்தட்டும். அதை எதிர்க்காதேயுங்கள்; பெற்றுக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: தேவன் உங்களை மேலே உயர்த்தட்டும்.