“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.” – 2 நாளா 16:9
என் வாழ்க்கையில், தேவன் நம்மிடமிருந்து சரியான செயல் திறனைத் எதிர்பார்க்கிறதில்லை என்று மீண்டும் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் முழுமையடையும் வரை தேவன் அவர்களை பயன்படுத்த மாட்டார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அந்த வகையான சிந்தனை, தேவன் அவர்களைப் பயன்படுத்த இயலாதபடி தடுக்கிறது. ஆனால் தேவன் அதையும் கடந்து நம்மை பயன்படுத்துகிறார்.
சில நேரங்களில் உங்கள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் உங்களை “நேசிக்கிறார்கள்”. அவர்கள் செய்ய விரும்புவதை நீங்கள் செய்தால், அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் உங்களை நிராகரிக்கிறார்கள். தேவனுடைய அன்பு தேவனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் அப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார்.
இதனால், நாம் ஒரு தளர்வான மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும், பரிசுத்தமான வாழ்க்கை வாழ விரும்பக் கூடாது என்று அர்த்தமாகாது. உத்தம இருதயத்தைக் கொண்டிருப்பவர், எப்போதும் ஆர்வத்தோடும், வாஞ்சையோடும் எல்லாவற்றிலும் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவார். ஆனாலும், அவர்களின் பலவீனங்கள் மற்றும் தவறுகளால் கடவுள் அவர்களை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர், நாம் பலவீனமாக இருக்கும்போது நம்மை நேசிக்கவும் உதவவும் விரும்புகிறார்.
தேவன் உங்களை நேசிக்கட்டும். அதற்கு பதிலாக, ஒரு உத்தம இருதயத்துடன் உங்கள் அன்பை அவருக்குக் கொடுங்கள்!
ஜெபம்
தேவனே, எனக்கு பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும் நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை நான் அறிவேன். அந்த அன்பிற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உம்மை ஒரு உத்தம இருதயத்துடன் பின்தொடரும்போது, நீர் என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிந்தவனாக, என் இருதயத்தை உமக்கு கொடுக்கிறேன்.