ஒரு எளிய பாக்கியம்

ஒரு எளிய பாக்கியம்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:7)

தேவனிடம் பேசுவதையும், கேட்க முடிவதையும் விட உயர்ந்த மரியாதையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மேலும் ஜெபமே நம் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம் என்று நான் நம்புகிறேன். இது நாம் கட்டாயமாய் செய்ய வேண்டிய காரியம் அல்ல; அது நாம் செய்ய வேண்டிய ஒன்று. ஜெபம் என்பது தேவனுடைய திட்டங்களும், நோக்கங்களும் நம் வாழ்விலும், நாம் விரும்புகிறவர்களின் வாழ்க்கையிலும் நிறைவேறுவதைக் காண்பதற்கு நாம் அவருடன் கூட்டு சேரும் வழி. பூமியில் உள்ள மனிதர்களாகிய நாம், அவருடைய அற்புதமான பிரசன்னத்திற்குள் நுழைவதற்கு இது ஒரு வழியாகும். இது அவருடன் நம் இருதயத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவர் நமக்காக வைத்திருக்கும் அனைத்து பெரிய காரியங்களையும் கண்டுபிடித்து அனுபவிக்கவும் நமக்கு உதவுகிறது. கடவுளுடன் தொடர்பு கொள்வது எனக்கு மிகப் பெரிய பாக்கியம், ஆனால் இந்த உயர்ந்த மற்றும் புனிதமான பணி எனக்கு தெரிந்த ஒரு எளிய பாக்கியமுமாகும்.

கடவுளுடன் பேசுவது அல்லது அவருடைய சத்தத்தைக் கேட்பது எப்போதுமே சிக்கலானதாக இருக்கும் வேண்டும் என்று நான் நம்பவில்லை, ஆரம்பத்திலிருந்தே, ஒவ்வொரு நாளும், நாம் அவருடன் இணைந்திருக்கும் எளிதான, இயற்கையான வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஜெபம், உங்களுடைய சுவாசம் போல் இருக்கட்டும்; நாள் முழுவதும் இயற்கையாகவும், எளிமையாகவும் செய்யுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon