ஒரு சிறந்த வழி

ஒரு சிறந்த வழி

இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். (1 கொரிந்தியர் 12:31)

இன்றைய வசனத்திற்கு பின் கொடுக்கப்பட்டுள்ள 1 கொரிந்தியர் 13, இப்படி சொல்கிறது. எத்தனை பரிசுத்த ஆவியின் வரங்கள் நம்மில் செயல்பட்டாலும், நாம் அன்பாயிராவிட்டால் அவை முற்றிலும் பயனற்றவை என்று நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. இன்றைய வசனத்தின்படி, அன்பு ஒரு சிறந்த வழி மற்றும் எல்லாவற்றையும் விட சிறந்தது.

“நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரிந்தியர் 13:2 ஐப் பார்க்கவும்).

ஆவியால் நிரப்பப்பட்ட கடவுளுடணான எனது நடைபயணத்தின் ஆரம்ப நாட்களில், ஆவியின் வரங்களைப் பற்றி பலர் நிறைய பேசுவதை நான் கேட்டேன். பலர் தங்களிடம் என்ன வரங்கள் உள்ளன மற்றும் அவற்றை எப்படிப் பயிற்சி செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தினர். துரதிர்ஷ்டவசமாக, அன்பைப் பற்றியோ அல்லது ஆவியின் மற்ற கனிகளைப் பற்றியோ நான் கேள்விப்பட்டதை விட ஆவிக்குறிய வரங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டேன்.

ஆவியின் ஒன்பது வரங்கள் 1 கொரிந்தியர் 12 மற்றும் ரோமர் 12 இல் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆவியின் ஒன்பது பலன்கள் கலாத்தியர் 5 இல் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆவியின் வரங்கள் மிகவும் முக்கியமானவை, அவற்றை நாம் ஆழமாக விரும்ப வேண்டும். நாம் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் எவ்வாறு சரியாக செயல்பட வேண்டும் என்பதை அறிந்து, நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களை வளர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், நாம் ஒருபோதும் அன்பில் வலியுறுத்துவதையும், செயல்படுவதையும் விட வரங்களையோ அல்லது வரங்களில் செயல்படும் திறனையோ வலியுறுத்தக்கூடாது.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களை நேசிக்கிறார். அவருடைய அன்பை உங்கள் மூலம் மற்றவர்களிடம் பாய விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon