ஒரு பெரிய வர்த்தகம்

ஒரு பெரிய வர்த்தகம்

“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” – சங்கீதம் 55:22

கடவுள் உங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கவலைகள், பிரச்சினைகள் மற்றும் தோல்விகளை அவரிடம் கொடுத்து விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பதிலுக்கு, அவர் தனது சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் உங்களுக்குத் தருவார்.

கடவுள் உண்மையில் நம்மைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரை அனுமதிப்பதற்காக, நம்மைக் கவனித்துக் கொள்வதையும், நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒவ்வொரு சிறிய விஷயத்தைப் பற்றியும் கவலைப்படுவதையும் நிறுத்த வேண்டும். அனேகர் தேவன் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் கடவுளின் வழிநடத்துதலுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, கவலைப்பட்டுக் கொண்டோ அல்லது சொந்தமாக ஒரு பதிலைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டோ இருப்பார்கள்.

கடவுள் நமக்கு சமாதானத்தைத் தருவார், ஆனால் முதலில் நம்முடைய கவலைகளை அவரிடம் கொடுக்க வேண்டும். என்ன ஒரு பெரிய வர்த்தகம்! நாம் தேவனிடம் நம்முடைய கவலைகளைத் தருகிறோம், அவர் நமக்கு அவருடைய சமாதானத்தை தருகிறார். நம்முடைய எல்லா கவலைகளையும், பாவங்களையும் அவரிடம் கொடுக்கிறோம். அவருடைய பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும், மகிழ்ச்சியையும் அவர் நமக்குத் தருகிறார். அதுதான்

அவரால் பராமரிக்கப்பட்டு பார்த்துக் கொள்ளப்படுவதின் அற்புதமான ஆசீர்வாதமும், பாக்கியமுமாகும்.


ஜெபம்

ஆண்டவரே, நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வர்த்தகத்தை வழங்கியுள்ளீர்கள். நீங்கள் என்னை விட மிகவும் திறமையானவர். ஆகவே நான் என்னுடைய எல்லா பாரங்களையும் உம்மிடம் தருகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்கிறேன்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon