ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13)
கடவுளிடமிருந்து கேட்க எனக்கு மிகவும் பிடித்த வழிகளில் ஒன்று, வழக்கமான ஞானம் மற்றும் பொது அறிவு. ஞானம் ஒரு சூழ்நிலையில் உண்மையைப் பகுத்தறிகிறது, அதே சமயம் பொது அறிவு, உண்மையை என்ன செய்வது என்பது பற்றிய நல்ல தீர்ப்பை வழங்குகிறது. நான் ஞானத்தை இயற்கைக்கு அப்பாற்பட்டதாகக் கருதுகிறேன், ஏனெனில் அது மனிதர்களால் கற்பிக்கப்படவில்லை; அது கடவுளின் பரிசு.
பல அதிநவீன, புத்திசாலி மக்களுக்கு ஞானமும், பொது அறிவும் இல்லை. கடவுளுடைய வார்த்தை கூறுகிறது, “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5).
“ஆவிக்குறியவர்களாக” இருக்க பொது அறிவைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பல பேர் நினைக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆவிக்குறிய மக்கள், மகிமையின் மேகங்களில் நாள் முழுவதும் மிதப்பதில்லை; அவர்கள் நிஜ உலகில் வாழ்கிறார்கள் மற்றும் உண்மையான பிரச்சினைகளை உண்மையான வழிகளில் கையாளுகிறார்கள். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் உண்மையான பதில்கள் தேவை – மேலும் அந்த பதில்கள் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிறது. அது அவருடைய ஆவியால் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
நாம் தேடுகிறோம், பேசுவதைக் கடவுள் செய்கிறார், ஆனால் அவர் ஞானத்தின் ஆவியானவர், விவேகமற்ற எதையும் செய்யச் சொல்ல மாட்டார். நம்மிடம் பேசவும், நம்மை வழிநடத்தவும் நாம் பலமுறை கடவுளிடம் கேட்கிறோம், ஆனால் அவர் நமக்கு வேதத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வார்த்தையைக் கொடுக்கவில்லை என்றாலும் அல்லது நம் இருதயத்தில் ஒரு வார்த்தையைப் பேசவில்லை என்றாலும், நாம் இன்னும் நம் அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டும் மற்றும் முடிவுகளை எடுக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய தேர்வையும் கடவுள் கட்டளையிடப் போவதில்லை, ஆனால் அவர் நமக்கு அதற்கான ஞானத்தையும், பொது அறிவையும் தருகிறார் – மேலும் அந்த இரண்டும் வெற்றிகரமான கலவையை உருவாக்குகின்றன.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் தேடுங்கள், தேவன் பேசுவதைச் செய்வார்.