“ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.” – பிலிப்பியர் 4:1
நம் சூழ்னிலைகள் எப்படியாக இருப்பினும் நாம் திருப்தியாக இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. எனக்கென்று தனிப்பட்ட தேவை எதுவும் இல்லை என்று அர்த்தமில்லை. ஆனால் நான் எந்த நிலையில் இருந்தாலும் எப்படி திருப்தியாக இருப்பது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அப்போஸ்தலர் பவுல் எழுதினார்.
உங்களிடம் ஏற்கனவே இருப்பதில் சந்தோசமாக இருக்க தீர்மானிப்பதே திருப்தியாகும். துரதிஷ்டவசமாக நாம் நீண்ட நாட்களாக திருப்தியற்ற வாழ்க்கை வாழ்ந்து விட்டு பின்னர் இறுதியாக தேவனே. இனிமேலும் இப்படியாக நான் வாழ விரும்பவில்லை என்று சொல்வதன் மூலம் திருப்தியை கற்றுக் கொள்கிறோம். ஆனால் அது அவ்வாறாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு நாளும் திருப்தியாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேர்க்கும் எல்லா உலகப் பொருள்களை விட அதிக தகுதியானது.
பவுல் இதை, 1 தீமோத்தேயு 6:6-ல் போதுமென்ற மனதுடன் கூடிய தெய்வ பக்தி மிகுந்த ஆதாயம் என்று எழுதி தெளிவுபடுத்துகிறார்.
நம்மை நிச்சயமாகவே சந்தோஷமாக்குவது எது? கர்த்தருக்குள்ளான திருப்தியை அனுதினமும் தெரிந்துகொள்வது. ஆண்டவரிடம், ‘ஆண்டவரே நான் என்ன பெற்றிருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அதை மட்டுமே நான் விரும்புகிறேன் என்று சொல்வது உண்மையான சமாதானத்துக்கும் நிலைக்கும் சந்தோஷத்திற்குமான ஒரே வழி.
ஜெபம்
தேவனே, எனக்காக நீர் விரும்புவதை மட்டுமே நான் விரும்புகிறேன். அப்போஸ்தலர் பவுலைப் போன்று எல்லா சூழ்நிலையிலும் நான் திருப்தியாக இருப்பதை தெரிந்து கொள்கிறேன்