கடவுளால் நிரப்பப்படுதல்

கடவுளால் நிரப்பப்படுதல்

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்! (எபேசியர் 3:17, 19)

கடவுளுடைய பிரசன்னத்தாலும் வல்லமையாலும் தினமும் நிரப்பப்படுவது அற்புதமானது. இன்றைய வசனத்தின்படி, அது கடவுளுடைய சித்தம். நம்மால் நிறைந்திருப்பதை விட கடவுளால் நிரப்பப்படுவது மிகவும் சிறந்தது. சுயநலம், வாழ்வதற்கு ஒரு பரிதாபமான வழி. ஆனால் கடவுள் இயேசு கிறிஸ்துவின் மூலம் அவருக்காகவும், மற்றவர்களுக்காகவும் வாழ ஒரு வழியை வழங்கியுள்ளார்.

கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தார் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. “உயிரோடிருக்கிற அனைவரும் இனி தங்களுக்காக வாழாமல், அவருக்காக வாழ்கிறார்கள்” (2 கொரிந்தியர் 5:15). சமாதானமும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு அற்புதமான வாழ்க்கையைப் பெற இயேசு ஒரு வழியை உருவாக்கியுள்ளார். நம்முடைய சொந்த இன்பங்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் வாழாமல், பிறரை நேசிக்கும் வழியை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

கடவுளின் பிரசன்னத்தால் நிரப்பப்படுவதற்கு, அவரைத் தேடுவது, அவருடைய வார்த்தையைப் படிப்பது மற்றும் நம் வாழ்வில் அவருக்கு இடமளிக்கும் நடத்தைகளை வளர்ப்பது ஆகியவை தேவை. உங்கள் நாளை, வேதவாக்கியங்களுடனும், கடவுளுடன் ஐக்கியம் கொள்வதுடனும் தொடங்குவது, உங்கள் நாளை சரியாகத் தொடங்குவதற்கான வழியாகும். இந்த நாள் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு, அதை வீணாக்காதீர்கள். அவருடைய பிரசன்னத்தால் உங்களை நிரப்ப அவர் காத்திருக்கிறார். எனவே உங்கள் மகிழ்ச்சி நிறைவாக இருக்குமாறு கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளால் நிரப்பப்பட்டு, உங்கள் மூலம் மற்றவர்கள் தொடப்படட்டும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon