உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. (1 கொரிந்தியர் 2:4-5)
கல்வி முக்கியமானது தான், ஆனால் உலகக் கல்வி மற்றும் மனிதர்களின் தத்துவத்தை விட கடவுளின் ஞானம் சிறந்தது மற்றும் மதிப்பு மிக்கது என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் உயர் கல்வியறிவு பெற்றவர். ஆனால் கடவுளுடைய வல்லமையே தனது பிரசங்கத்தை மதிப்புமிக்கதாக்கியது, அவருடைய கல்வியல்ல என்று உறுதியாகக் கூறினார்.
கல்லூரியில் பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்று, வேலை கிடைக்காமல் சிரமப்படும் பலரை நான் அறிவேன். கல்லூரிக்குச் செல்ல வாய்ப்பு இல்லாதவர்களையும் நான் அறிவேன். அவர்கள் கடவுளைச் சார்ந்து இருந்ததால், பெரிய வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள். உங்கள் நம்பிக்கை எங்கே? அது கடவுளில் உள்ளதா அல்லது நீங்கள் அறிந்தவற்றில் உள்ளதா? நாம் எதை அறிந்திருந்தாலும், யாரை அறிந்திருந்தாலும், நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவின் மீதும் அவருடைய வல்லமையிலும் இருக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 1:21 இல் பவுல் குறிப்பிட்டுள்ளதாவது, உலகம், அதன் ஞானம் மற்றும் தத்துவம் அனைத்தையும் கொண்டு கடவுளை அறியத் தவறி விட்டது, ஆனால் அவர் தன்னை வெளிப்படுத்தி, பிரசங்கத்தின் மூலம் மனிதகுலத்தைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்தார். துரதிர்ஷ்டவசமாக, அதிக கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பவர்களுக்கு, எளிமையான, குழந்தை போன்ற நம்பிக்கையை வைத்திருப்பது கடினமாக இருப்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். நாம் கவனமாக இல்லாவிட்டால், அதிகமான தலை அறிவும், பகுத்தறிவும் உண்மையில் நமக்கு எதிராக வேலை செய்யலாம். ஏனென்றால் நாம் கடவுளை ஆவி மற்றும் இருதயத்தால் மட்டுமே அறிய முடியும், மூளையால் அல்ல. வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் உதவுவதற்காய், உங்கள் நம்பிக்கை, கடவுளின் வல்லமையில் இருக்கட்டும், மனித தத்துவத்தில் அல்ல.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எந்த தடையையும் கடவுளின் வல்லமை கடக்கும்.