கடவுளுக்காக வாழ்வது எல்லாமே முக்கியமானது

“ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.” – 2 கொரி 10:12

கூட்டத்தைப் பின்பற்றாமல் தேவனைப் பின்பற்றுவதற்கு தைரியம் வேண்டும். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அளவுக்கதிகமாக கவலைப்படுவது நம்மை துன்புறுத்தவே செய்யும். எல்லோருமே நன்றாக நினைக்கப்படுவதை விரும்பினாலும், எல்லோராலும், எந்நேரத்திலும் நாம் விரும்பப்படுவது இயலாததாகும்.

பொதுவாகவே நாம் நம் வாழ்விலே எதைப் பெற்றுக் கொள்ள விரும்பினாலும், அதைப் பெற்றுக் கொள்ள ஏதாவதொன்றை இழந்து தான் ஆக வேண்டும். அப்படியென்றால் நாம் நம்மை பிறருடைய அளவுகளுடன் ஒப்பிடுவதை நிறுத்தி விட்டு தேவனுக்காக வாழ தொடங்க வேண்டும்.

உங்களது உண்மையான நண்பர்கள், தேவன் உங்களை எப்படியெல்லாமாக இருக்க விரும்புகிறாரோ அப்படியெல்லாமாக மாற்றுவதற்கு உதவுவர். தேவனுடைய அழைப்பை பின்பற்றுவதால் உங்களை நியாயந்தீர்க்க மாட்டார்கள். உண்மையான நண்பர்கள், தேவனை நீங்கள் உங்கள் வாழ்விலே முதலாவதாக வைக்கும்படி உற்சாகப்படுத்துவார்கள். மற்றெல்லாரும் உங்களை விட்டு சென்றாலும், அவர் உங்களை விட்டு விலகவும், உங்களை கைவிடவும் மாட்டேனென்று வாக்களித்திருக்கிறாரே.

தேவனையும், மனுஷர்களையும் பிரியப்படுத்த முயற்சிக்கும் போது வாழ்க்கை மிகவும் குழப்பமானதாகவும், கடினமானதாகவும், விரக்தியடையச் செய்கிறதாகவும் மாறி விடுகிறது. நீங்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேவனுக்காக வாழுங்கள். அவர் உங்களை எப்படி இருக்கும்படி செய்திருக்கிறாரோ அப்படியாகவே இருங்கள்.

ஜெபம்

தேவனே, உமக்காக மட்டுமே நான் வாழ்வேன் என்று இப்போது தீர்மாணம் எடுக்கிறேன். எனக்காக பிறர் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கும், அளவுகளுக்கும் ஏற்ப வாழ்வது என்னை எங்கும் கொண்டு செல்லாது. நீர் ஒருவரே எனக்குப் போதும். நான் எப்படி இருக்க வேண்டுமென்று நீர் என்னை சிருஷ்டித்தீரோ அப்படியாக இருக்க விரும்புகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon