நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். (2 கொரிந்தியர் 1:3)
நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படவே விரும்புகிறோம், நிராகரிக்கப்பட விரும்புவதில்லை. நிராகரிக்கப்பட்ட உணர்விலிருந்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை, அதன் வலியை நான் வெறுக்கிறேன். ஆனால் அதைப் பற்றி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் பல ஆண்டுகளாக நான் அதை அனுபவித்தேன். கடவுளுக்கு நன்றி, எல்லாம் மாறிவிட்டது!
பல ஆண்டுகளுக்கு முன்பு, நிராகரிப்பின் வலியை மீண்டும் கொண்டு வந்த ஒரு சம்பவம் நடந்தது. என் குழந்தைப் பருவத்தில் என்னைப் பெரிதும் காயப்படுத்திய ஒருவரை அணுகினேன். மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, என் மீது தவறு இல்லாத போதும் நான் குற்றம் சாட்டப்பட்டேன். மேலும் அந்த நபருக்கு என் மீது எந்த அக்கறையும் இல்லை என்ற தெளிவான உண்மை புரிந்தது.
நான் என்னை மறைத்துக் கொண்டு, வருத்தப்பட விரும்பினேன், ஆனால் அதற்கு பதிலாக, நான் உடனடியாக கடவுளிடம், பரிசுத்த ஆவியின் ஆறுதலைக் கேட்டேன். என் காயப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்தவும், இயேசுவைப் போலவே நிலைமையைக் கையாளவும் நான் அவரிடம் கேட்டேன். நான் கடவுளின் மீது தொடர்ந்து சாய்ந்து கொண்ட போது, என் காயங்களின் மீது எண்ணெய் ஊற்றப்படுவது போல, ஒரு இதமான உணர்வு எனக்கு வந்ததை உணர்ந்தேன்.
என்னைக் காயப்படுத்தியவரை மன்னிக்கும்படி நான் கடவுளிடம் கேட்டேன். அவர் “காயப்பட்ட மக்கள் காயப்படுத்துகிறார்கள்” என்ற பழமொழியை என் நினைவுக்கு கொண்டு வந்தார். அவருடைய தனிப்பட்ட பதில் என் காயப்பட்ட ஆவிக்கு குணமளித்தது.
எல்லா ஆறுதல் மற்றும் ஊக்கத்தின் ஆதாரம் கடவுள். தயவு செய்து, அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவும், பராமரிக்கவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஏனென்றால் அந்தச் சூழலில் நீங்கள் அவருடைய குரலைக் கேட்கவும், அவருடைய ஆறுதல் மற்றும் குணப்படுத்துதலைப் பெறவும், அவருடைய ஊக்கம் மற்றும் கவனிப்பு மூலம் பலப்படவும் முடியும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஆறுதல் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதை கடவுள் அறிவார்; அதைச் செய்யவே அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியை அனுப்பினார்.