கடவுள் நமது வரங்களைத் தேர்ந்தெடுக்கிறார்

கடவுள் நமது வரங்களைத் தேர்ந்தெடுக்கிறார்

யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். (யோவான் 3:27)

ஆவிக்குறிய வரங்கள், இயற்கை திறன்கள் மற்றும் கடவுள் அவர்களின் வாழ்க்கையில் வைத்த அழைப்புகள் போன்றவற்றில் மக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் போது அல்லது தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கடினமான ஒன்று நடக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒப்பீடும், போட்டியும், கடவுள் நம்மை வடிவமைத்ததைச் செய்வதில் உள்ள மகிழ்ச்சியை இழக்கச் செய்கிறது.

இன்றைய வசனம் நம்மிடம் இருக்கும் வரங்களால் திருப்தி அடையும்படி அறிவுறுத்துகிறது. நம்முடைய வரங்கள் கடவுளிடமிருந்து வருகிறது. அவர் நமக்குக் கொடுக்கும் வரங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால் கடவுள் நமக்குத் தர முடிவு செய்யா விட்டால், எந்த வரங்களும் நமக்குக் கிடைக்காது. நாம் பரிசுத்த ஆவியானவரை நம்ப வேண்டும். கடவுளுடைய சித்தம் பூமியிலும், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிறைவேறுவதை உறுதிப்படுத்த உதவுவதற்காக அவர் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று நம்புகிறோம்.

தேவன் பரிசுத்த ஆவியை நம்மில் குடியிருக்க அனுப்பியிருக்கிறார் என்ற உண்மையை தியானிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் உண்மையாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் அவர் உண்மையில் வாழ்கிறார். பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார். இயேசு தம்முடையதை எடுத்துக் கொள்ள திரும்பி வரும், மீட்பின் இறுதி நாள் வரை நம்மைக் காத்துக்கொள்ளும்படி அனுப்பப்பட்டார். அவர் நம்மிடம் பேச முயற்சிக்கிறார். அதனால் இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததின் முழுமைக்கு நேராய் நம்மை வழிநடத்த முடியும். நாம் நமது அழைப்புக்கு எதிராகப் போராடும் போது அல்லது நாம் என்னவாக இருக்கிறோம், நம்மிடம் இருப்பதைப் பற்றி அதிருப்தி அடையும் போது, பரிசுத்த ஆவியின் செயலுக்கும், ஞானத்திற்கும் எதிராகப் போராடுகிறோம். நாம் அவருக்கு அடிபணிந்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவர் நமக்குள் வைத்துள்ள வரங்களை வளர்த்து, அவருடைய உதவியோடு, கடவுளின் மகிமைக்காக நம் வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாகவும், முழுமையாகவும் வாழ வேண்டும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: மனநிறைவு என்பது கடவுளுக்கு ஒரு பாராட்டு. நாம் அவரை நம்புகிறோம், அவர் நமக்காகச் செய்யும் அனைத்தையும் பாராட்டுகிறோம் என்று அது அவருக்குச் சொல்கிறது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon