
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 29:11)
தேவன் நம்மிடம் பேசுவதற்கும் நம்மை வழிநடத்துவதற்கும் ஒரு சிறந்த வழி, மனதில் கொடுக்கப்படும் உள் சாட்சியின் மூலமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எது சரி அல்லது தவறு என்று நமக்குத் தெரியும். இதை “அறிவு” என்று சொல்வதை விட அறிவின் ஆழமான நிலை என்று சொல்லலாம். இந்த வகையான அறிவானது ஆவியில் உள்ளது — நம்மிடம் வெறுமனே சமாதானம் அல்லது சமாதானமர்ற நிலை உள்ளது. சமாதானம் இருக்கும் அல்லது இல்லாததன் மூலம், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிவோம்.
நான் ஒரு முறை, ஒரு தீவிரமான முடிவை எடுக்க வேண்டிய ஒரு பெண்ணிடம் பேசினேன். அவளுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் அவளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள், ஆனால் சரியான பதில் என்ன என்பதை அவள் தனக்குள்ளேயே தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அவள் தான் அதனுடன் வாழ வேண்டும். அவள் வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்து கொண்டிருந்தாள். அதிலிருந்து வெளியேறி தன் குழந்தைகளுடன் வீட்டில் இருக்க விரும்பினாள். நிச்சயமாக, அதனால் அவள் நிதி நிலமையை சரி செய்ய வேண்டியிருந்திருக்கும் மற்றும் தனிப்பட்ட மாற்றங்கள் அவளுக்கு தேவைப்பட்டிருக்கும், அது அவளை உணர்ச்சி ரீதியாக கூட பாதித்திருந்திருக்கலாம். சரியான முடிவு என்ன என்பதை அவள் கடவுளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடமிருந்து அல்ல.
அந்த பெண் தனது உறவினர் ஒருவருடன் ஒரு ஊருக்கு சென்றுள்ளார். அந்த வார இறுதியில், அவள் தேவனை ஆராதித்து, வணங்கி, போதகரின் பேச்சைக் கேட்டபோது, அவள் வணிகத்தை மூடுவது, உண்மையில் சரியானது என்று அவள் மனதில் ஒரு அறிவும், சமாதானமும் வந்தது. எது சரி என்று தெரிய வேண்டிய தருணம் வந்து விட்டது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அன்றிலிருந்து அவள் தன் முடிவைப் பற்றி நிம்மதியாக இருந்தாள்.
நல்ல எண்ணம் உள்ளவர்கள் நம்மிடம் பல விஷயங்களைச் சொல்ல முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் அவர்கள் உண்மையில் நம்மைப் பாதிப்புக்குள் நடத்தவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி, தேவன் நம்மிடம் பேசும்போது, அது நம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் மட்டுமே கொடுக்கக்கூடிய உள்ளார்ந்த சாட்சியை கடவுளிடம் கேளுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: தேவன் மட்டுமே உங்களுக்கு சமாதானத்தைத் தர முடியும்.