ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:3-5)
நாம் கடவுளிடம் நெருங்கி வரும் போது நமக்கு கிடைக்கும் ஒன்று பகுத்தறிவு. இது ஒரு பொருளின் மேற்பரப்பை ஊடுருவி, அதன் ஆழமான பகுதிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. காரியங்கள் எப்பொழுதும் தோன்றும் விதத்தில் இருப்பதில்லை. எனவே பகுத்தறிவது என்பது மதிப்பு மிக்க ஒன்று. பகுத்தறியும் மனமும், இருதயமும் இருந்தால், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பகுத்தறிவுக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறேன்.
காரியங்கள் தோற்றமளிக்கும் விதத்தைப் பொறுத்தும், நாம் என்ன நினைக்கிறோம் அல்லது எப்படி உணர்கிறோம் என்பதைப் பொறுத்தும் நாம் முடிவுகளை எடுத்தால், பல விவேகமற்ற முடிவுகளை எடுப்போம். ஏதோ ஒன்று நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அதை முன்னெடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் இருந்தால், நீங்கள் இன்னும் கொஞ்சம் காத்திருந்து ஜெபிக்க வேண்டும். உங்கள் ஆவியில் பகுத்தறிவைத் தந்து, உங்களை அவருடைய ஆவியால் வழிநடத்தும்படி கடவுளிடம் கேட்க வேண்டும். அதைப் பற்றி உங்களுக்கு அமைதி இல்லையென்றால் அல்லது அது உங்கள் ஆவியில் சரியாகப் பொருந்தாது போல் தோன்றினால் ஒருபோதும் அதை செய்யாதீர்கள்.
இன்றைய வசனம், கர்த்தருக்குப் பயப்படுவதைப் புரிந்துகொள்ள நம்மை ஊக்குவிக்கிறது. உங்கள் இருதயத்தில் நீங்கள் நினைப்பதற்கு எதிராகச் செல்லாமல் கவனமாக இருப்பது, கர்த்தருக்குப் பயப்படுவதைக் கடைப்பிடிப்பதாகும். இது, உங்கள் மனம் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவர் உங்களுக்கு வழி காட்டுகிறார் என்று நீங்கள் நம்புவதை காட்டுகிறது. ஆவியானவரால் வழிநடத்தப்படுவதைக் கற்றுக்கொள்வது, கடவுள் பேசும் விதத்தை வளர்ப்பதற்கு உதவி செய்கிறது. எனவே இந்த பகுதியில் தொடர்ந்து ஜெபிக்கவும், பயிற்சி செய்யவும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: அறிவை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்காதீர்கள். உள்ளான சோதனை செய்து, பகுத்தறிவு உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறது என்பதைப் பாருங்கள்.