அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். – ரோமர் 12:3
இந்த உலகிலே நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து இருப்பீர்கள் என்றால், வெகு சில நாட்களே நாம் விரும்பும்படி நடக்கிறது. தேவன், நமக்கு ஒரு சூழ்நிலையிலே சந்தோசமாக இருக்கும் திறனை அளிக்காமல் அந்த சூழ்நிலையிலே நம்மை ஒருபோதும் வைப்பதில்லை.
ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற விசேஷ கிருபையை தேவன் நமக்கு அளிக்கிறார் என்று நான் நம்புகிறேன். கிருபையை நான் இப்படியாக விளக்க விரும்புகிறேன். “நாம் செய்ய வேண்டியது எதுவாக இருப்பினும் அதை செய்து முடிக்க உதவும் தேவனுடைய வல்லமையே கிருபை”. அந்த வல்லமை இன்று உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை பெற்றுக் கொள்ளும் ஒரே வழி விசுவாசத்தின் மூலம் தான்.
ரோமர் 12:3, எல்லோருக்கும் தேவன் விசுவாசத்தை அளந்து கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறது. இன்று உங்களிடம் கேட்டுப்பாருங்கள். என்னுடைய விசுவாசத்தைக் கொண்டு நான் என்ன செய்கிறேன்? உங்கள் விசுவாசத்தை, உங்கள் மேலா, மற்றவர்கள் மேலா அல்லது சூழ்நிலைகளின் மேலா வைக்கின்றீர்கள்? அது கிருபையால் வாழ்வதில்லை, அது உங்களுடைய சொந்த பலத்தாலும் கிரியைகளிலும் வாழ்வதாகும். அதனால் பலனில்லை!
ஆனால் உங்கள் விசுவாசத்தை கட்டவிழ்த்து, உங்களால் செய்ய இயலாததை தேவன் செய்யும்படி அவரை நம்பும் போது, நீங்க உங்கள் விசுவாசத்தை அவர்மீது வைக்கின்றீர்கள். கிருபை – தேவனுடைய வல்லமை – விசுவாசத்தின் மூலம் வந்து உங்களையும் பிறரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் காரியங்களை செய்ய உங்களை ஏதுவாக்கும்.
என்னுடைய நீண்ட விளக்கம் இதோ: “அது நமக்கு இலவசமாக கிடைக்கும் தேவனுடைய வல்லமையாகும். அதற்கு, நாம் நம் விசுவாசத்தை தேவன்மேல் வைப்பதைவிட வேற எதுவும் தேவைப்படுவதில்லை. நாம் நாமாக எவ்வளவு போராடியும், முயன்றும் ஒருபோதும் செய்ய இயலாததை சுலபமாக செய்ய உதவும் வல்லமையே கிருபை.”
உங்கள் விசுவாசத்தை தேவன் மேல் வையுங்கள். இன்று அவருடைய கிருபையை உங்களுக்கு அளிக்க அவர் விரும்புகிறார்.
ஜெபம்
நான் விரும்புவதை போன்று வாழ்க்கை அமைவதில்லை என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நான் உம்மை நம்புகிறேன். விசுவாசத்தால் என்று நான் எதிர்கொள்ளும் எந்த சூழ்நிலையிலும் நான் நடக்க எனக்கு இலவசமாக கொடுக்கப்பட்டிருக்கும் வல்லமையாகிய உமது கிருபையை விசுவாசித்தால் பெற்றுக்கொள்கிறேன்.