
“ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.” – பிலி 3:3
உண்மையான நம்பிக்கையானது, நாம் எப்படி உணர்கிறோம் அல்லது நம்மால் என்ன செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது என்பதிலிருந்து வருவதில்லை – அது கிறிஸ்துவில் நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றிய வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதால் ஏற்படுகிறது. தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நாம் உண்மையில் அறிந்திருக்கும்போது, கடந்த கால வேதனைகளிலிருந்து நாம் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, நாம் மாம்ச காரியங்களின் மேல் நம் நம்பிக்கையை வைக்க வேண்டிய அவசியத்தை நாம் இனி உணர மாட்டோம்.
பல பிரசங்கிமார்களைப் போல், எனக்கு கல்லூரிப் பட்டம் இல்லாததால், நம்பிக்கையின்மையுடன் போராடிய காலம் எனக்கு நினைவிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, என் மீது தேவன் கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்பில் கவனம் செலுத்தத் தொடங்கியபோது, அவருடைய வார்த்தை என்னை யார் என்று சொல்லுகிறதோ அதில் நம்பிக்கை வைக்க கற்றுக் கொண்டேன். கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவ நீதியாக இருக்கிறேன் (2 கொரிந்தியர் 5:21 ஐக் காண்க).
சிதைந்த உங்கள் கடந்த கால காரியங்களிலிருந்து உங்களை குணப்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உண்மையான நம்பிக்கையை மீட்டெடுக்க இயேசு விரும்புகிறார். உங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்பதற்குப் பதிலாக கடவுளிடம் எது சரி என்று நீங்கள் பார்க்கும் போது அவருடன் இருப்பதன் மூலம் வரும் நம்பிக்கையில் நீங்கள் நடக்கத் தொடங்குவீர்கள்.
ஜெபம்
தேவனே, நான் கிறிஸ்துவில் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், என் மனதிலும் உணர்ச்சிகளிலும் உம்முடைய சுகத்தைப் பெற எனக்கு உதவும். என் நம்பிக்கையை உம் மீது வைக்க நான் தேர்வு செய்கிறேன்!