என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். (யோவான் 15:4)
கடவுளோடு நம் உறவை நாம் எந்தளவுக்கு வளர்த்துக்கொள்ளுகிறோமோ, அவ்வளவு அதிகமாக உற்சாகமாக ஆகிவிடுகிறோம். அது நல்லது. இருப்பினும், நாம் மக்களுக்கு உற்சாகத்தை விட அதிகமாக காட்ட வேண்டும்; அவர்கள் உண்மையான மாற்றம் மற்றும் நல்ல பலன்களுக்கான ஆதாரங்களைக் காண வேண்டும்.
நம் வாழ்க்கை மக்கள் படிக்கக்கூடிய கடிதங்களாக இருக்க வேண்டும் என்று பவுல் கூறினார் (பார்க்க 2 கொரிந்தியர் 3:3). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம்முடைய நடத்தை, வார்த்தைகள் அல்லது உணர்ச்சிகளை விட சத்தமாக பேசுகிறது. பொறுமை, நற்குணம், இரக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு உதவ விருப்பம் ஆகியவற்றுடன் உற்சாகமும், வைராக்கியமும் கலக்கப்பட வேண்டும் என்பதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டு கொண்டேன். நம் செயல்கள், உண்மையில் நம் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன. நிச்சயமாக, நாம் இயேசுவைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்தில் பேசப்படும் வார்த்தைகள் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் உண்மையான கிறிஸ்தவர்கள், அவற்றின் பலன்களால் அறியப்படுகிறார்கள்.
நீங்கள் கடவுளுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த உறவின் விளைவாக உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இது கடவுளை மகிமைப்படுத்தும் நல்ல கனி. மக்களிடம் மிகவும் வல்லமையாய் பேசும் நல்ல கனி. வார்த்தைகளால் மக்களை நம்பவைக்க முயற்சித்ததை நான் அறிவேன். அவர்கள் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. நான் அவர்களுக்கு உதவி செய்த போது, கடவுள் நிச்சயமாக என் வாழ்க்கையில் கிரியை செய்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். நல்ல கனி குறித்து வாதிடுவது மிகவும் கடினம், ஏனென்றால் நாம் என்ன சொல்கிறோமோ அப்படியே நாம் இருப்பதற்கு அது ஒரு சான்றாகும். எல்லா நேரங்களிலும் நீங்கள் மக்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: இந்த நாள் முடிவதற்குள் நீங்கள் பலரைச் சந்திப்பீர்கள். அவர்களை சிரிக்க செய்யுங்கள்!