சிந்தை மற்றும் வாய்

சிந்தை மற்றும் வாய்

விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். (மத்தேயு 12:34)

இன்றைய வசனம், எனது மாநாடு ஒன்றிற்கு வந்து எப்படி அவள் தன் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கற்பிக்கப்பட்டாலும், அவள் ஒருபோதும் யோசிப்பதையும் பேசுவதையும், நிறுத்தவில்லை என்பதை என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒரு பெண்ணை எனக்கு நினைவூட்டுகிறது. எதிர்மறையான விஷயங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் அவ்வாறு செய்ய சக்தியற்றவளாகத் தோன்றினாள்.

இந்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாள். மேலும் அந்த வலியைப் பெற்றிருந்த பல பெண்களை அவள் சந்தித்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, கடவுள் அவர்களிடம் சொன்ன அனைத்தையும், அவளிடமும் சொன்னதை அவள் உணர்ந்தாள், ஆனால் அவள் கீழ்ப்படியவில்லை, அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். அந்த வலி அவள் மனதை விட்டு விலக அனுமதிக்காததன் மூலம், தன் பிரச்சனைகளை அவள் ஆத்துமாவிற்குள் ஆழமாக செலுத்திக்கொண்டே இருந்தாள். ஆனால் மற்றவர்கள் கடவுளின் வார்த்தையைக் கொண்டு தங்கள் மனதை புதுப்பித்துக் கொண்டனர்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே இறுதியில் நம் வாயிலிருந்து வெளிவருகிறது. இந்தப் பெண் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததாலும், தன் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்தவில்லை என்பதாலும், அவள் தப்பிக்க முடியாத சிறையில் இருந்தாள். நாம் காரியங்களைப் பற்றி சிந்தித்துப் பேசுவதன் மூலம் அவற்றை தேடுகிறோம். கடவுளைத் தேட அவள் தன் எண்ணங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவள் கடக்க முயற்சிக்கும், பல விஷயங்களைத் தேட, அவற்றைப் பயன்படுத்தினாள்.

கடவுளுடைய விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பேசுவதன் மூலமும், நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் விஷயங்களில் உங்கள் மனதையும் உங்கள் வாயையும் நிரப்பும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேட்பதன் மூலமும், கடவுளைத் தேட, நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்களை வருத்தப்படுத்தும் விஷயங்களைப் பற்றி அல்ல.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon