அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். – சங்கீதம் 100:4
எபேசியர் 4:29 ல் அப்போஸ்தலர் பவுல் எவ்வித துர்பாஷைகளையும் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். ஒரு சமயத்தில், குறை கூறுதல் உள்ளடங்கி இருக்கிறதென்று அறியாமல் இருந்தேன், ஆனால் அப்போதிருந்து முறுமுறுப்பதும், குறை கூறுவதும் நம் வாழ்க்கையை கறை படுத்துகிறது என்பதைக் என்று கற்றுக்கொண்டேன்.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், குறை கூறுவது பாவமாகும். அது மக்களை பெரிய பிரச்சனைக்குள்ளாக்கி, அதை கேட்கின்றவர்களின் சந்தோசத்தை அழித்து விடுகின்றது.
நாம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது பெரிய டிபார்ட்மென்டல் கடையில் பில் போடுவதற்காக வரிசையிலே நிற்கும்போதோ நாம் எவ்வளவு சீக்கிரமாக பொறுமை இழந்து குறை சொல்ல தொடங்குகின்றோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நம் நண்பர்கள், குடும்பத்தாரின் குற்றங்களை நாம் எவ்வளவு துரிதமாக கண்டுபிடித்து சுட்டி காட்டுகின்றோம்? நாம் பெற்றிருக்கும் வேலைக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக அதைப்பற்றி குறை கூறிக்கொண்டு இருக்கிறோமா?
குறை கூறுவதற்கான சிறந்த முடிவு நன்றி சொல்வதாகும். உண்மையாகவே நன்றியுள்ள மக்கள் குறைசொல்ல மாட்டார்கள். அவர்கள் தாங்கள் கொண்டிருக்கும் நல்ல காரியங்களுக்காக நன்றி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதால் தாங்கள் குறை சொல்ல கூடிய காரியங்களை பற்றி கவனிக்க கூட அவர்களுக்கு சமயம் இருப்பதில்லை.
நாம் தேவனுடைய பிரகாரங்களில் துதியோடும், நன்றியோடும் வரவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. நீங்களும் நானும் ஒரு நன்றியுள்ள வாழ்க்கையை வாழ்வதை நம் அனுதின லட்சியமாக கொள்ள வேண்டும். நாம் இயன்ற களவு நேர்மறையாகவும், நன்றி உள்ளவர்களாகவும் இருப்போமாக.
இரவிலே படுக்கையிலே நீங்கள் நன்றியோடு இருக்க வேண்டிய காரியங்களை பற்றி நினைத்து கொண்டிருங்கள். அதுவே காலையில் நீங்கள் செய்யக்கூடிய முதல் காரியமாக இருக்கட்டும். சிறிய காரியங்களுக்காகவும் நாம் அதிக கவனம் செலுத்தாத காரியங்களுக்காகவும், வாகனம் நிறுத்த இடம் கிடைத்ததற்காகாகவும், காலையிலே வேலை செய்ய எழுந்ததற்காக, உணவுக்காக, குடும்பத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்ய இயலாமல் தோற்று போகும்போது அதை தூக்கி எறிந்து விட்டு விடாதீர். ஆனால் புதிய பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டு ஒரு நன்றியுள்ள மனப்பான்மையோடு நீங்கள் வாழும் வரை அதை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் நன்றியை தாராளமாக சொல்லுங்கள். அது தேவனுடனான உங்கள் உறவை இனிமையாக்கும்.
ஜெபம்
தேவனே, இப்போது இருந்து ஒரு நன்றியுள்ள மனப்பான்மையோடு வாழ விரும்புகிறேன். நீர் என்னை நேசிப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்காகவும் நன்றி செலுத்துகிறேன். வாழ்வில் இருக்கும் நேர்மறையான காரியங்களை பார்த்து நன்றியோடு இருக்க எனக்கு உதவுவீராக.