
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” – யோவான் 8:32
சத்தியம் என்று நாம் நம்பும் அல்லது நினைப்பதை கடந்து நம்மால் ஒருபோதும் செல்ல இயலாது.
இன்று அநேகர் அவர்கள் என்ன நம்புகின்றனர் என்பதைப்பற்றி யோசித்து கூட பார்க்காமல் சத்தியம் இல்லாததிலே, தங்கள் நம்பிக்கையை வைத்து அதன் மேலே தங்கள் முழு வாழ்க்கையுமே கட்டி எழுப்பி இருக்கின்றனர். செய்தித்தாள்கள், பிரபலமானவர்கள், நண்பர்கள் குழுவினரோ சொல்வது அவர்களுக்கு ‘சத்தியம்’ ஆகிவிடுகிறது.
தேவனுடைய வார்த்தையை நீங்களாக தோண்டி, ஆராய்ந்து நம்புவதை விட மற்றவர் என்ன சொல்கின்றனரோ அதை நம்புவது, உங்களை மட்டுப்படுத்தி தேவன் உங்களை எதற்காக சிருஷ்டித்தாரோ அப்படி ஆக விடாமல் தடுத்து நிறுத்தி விடும். ஆனால் சத்தியத்திற்காக போராடி அதை தழுவி அதன்மேல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டுவீர்கள் என்றால் ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தேவனுடைய சத்தியத்தோடு நீங்கள் ஒத்து செல்ல வேண்டுமென்றால் உங்களுடைய அனுதின செயல்திட்டத்தில், அவருடன் அன்னியோன்ய ஐக்கியப் படுவதை முன்னுரிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவருடன் அடிக்கடி ஜெபத்தின் மூலமாகவும், அவருடைய வார்த்தையை படிப்பதன் மூலமாகவும், ஆராதனையினாலும். நாள் முழுவதும் அவருடைய பிரசன்னத்தையும், வழிநடத்துதலையும் அங்கீகரிப்பதின் மூலம், அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று எவ்வளவு திட்டமாக செல்ல வேண்டுமோ, அவ்வளவாக என்னால் சொல்ல இயலாது.
தேவனை நீங்கள் அறிந்திருக்கும் போது சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள். அவருடைய சத்தியத்திலே வாழ்வது உங்கள் வாழ்விலே சமாதானத்தையும், விடுதலையும் சந்தோசத்தையும் கொண்டுவரும்.
ஜெபம்
தேவனே, நான் என்னுடைய எண்ணங்களாலும், நம்பிக்கையினாலும் சத்தியம் எது என்பதை அறியாமல் மட்டுப்படுத்தப்பட விரும்பவில்லை. நீரே சத்தியத்தின் ஒரே ஊற்று காரணர். உன்னோடு உறவாடும் போது உம்முடைய சத்தியத்தை எனக்கு காட்டும். அதிலே என்னை நடத்துவீராக.