அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். – பிலிப்பியர் 4:7
தேவனின் சமாதானத்தில் வாழ்வது, வாழ்வை அனுபவிக்க மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு நாளும் சமாதானத்திற்கு நேராக சிறு அடிகளை எடுத்து வைப்பது சமாதானமாக வாழும் வழிகளில் ஒன்று என்று நான் நம்புகிறேன். சமாதானமான வாழ்க்கைமுறையை கொண்டிருப்பதற்கு சில வழிகள்.
- உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்தெடுங்கள். நீங்கள் அனேக காரியங்களை செய்ய முயன்றும் ஒன்றையுமே நன்றாக செய்ய இயலாமல் இருக்கலாம். அவசரப்படுவது, பரிசுத்த ஆவியானவர் நீங்கள் செய்யும் படி உங்களை நடத்துவதை விட, அதிகம் செய்ய முயற்சிப்பது ஆகும். ஆவியால் நடத்தப்படுங்கள்.
- ‘இல்லை’ என்று நல்ல விதமாக சொல்ல ஆயத்தமாய் இருங்கள். சில சமயங்களில் ‘இல்லை’, ‘முடியாது’ என்று சொல்வதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு நாம் பொறுப்பேற்க தகாத அனேக பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் இல்லை என்று சொல்லவேண்டிய சமயத்திலே இல்லை என்று சொல்ல தகுந்த வார்த்தைகளை தேவனிடம் கொடுக்கும்படி கேளுங்கள்.
- காலம் தாழ்த்தும் ஆவியை எதிர்த்து நில்லுங்கள். நாம் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று தேவ வார்த்தை சொல்லுகிறது. இப்போது செய்ய நீங்கள் அறிந்திருப்பதை செய்யுங்கள். அதனால் உங்களுடைய ஓய்வு நேரங்களை அதிகமாக அனுபவிக்க அது ஏதுவாகும்.
- முக்கிய கவனச் சிதறல்களை அகற்றுங்கள். தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற கவன சிதறல்கள் உங்களை கவனம் சிதற செய்து விடும் என்றால் உங்களுக்கென்று சில வழிமுறைகளை நியமியுங்கள்.
- தடங்கலுக்கு தகுந்த எல்லைகளை நியமியுங்கள். வாழ்க்கை முழுவதும் தடங்கல்களால் நிரம்பியுள்ளது. ஆனால் அவற்றை ஆரோக்கியமான வழிமுறைகளே, சமாளிக்க சில எல்லைகளை நியமிக்க நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் எல்லை கடந்து செல்லும்போது கால வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம்.
- உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்ளுங்கள். நேரத்தையும் பிரச்சனைகளையும் காக்கும் அசாதாரணமான வழிகளை தேவன் உங்களுக்கு காட்டும்படி கேளுங்கள். உதாரணமாக எனக்கு சாப்பிடும் தட்டுகளை கழுவ நேரம் இல்லாத பொழுது காகித தட்டுகளை உபயோகிப்பேன்.
சமாதானத்தை முன்னுரிமையாக்க வேண்டுமென்பதே அடிப்படையாகும். அதற்கான நடைமுறை செயல்களை பின்பற்றுங்கள். அனுதினமும் உங்களை தமது பரிபூரண சமாதானத்துக்குள்ளாக நடத்துவாராக.
ஜெபம்
தேவனே, எல்லா புத்திக்கும் மேலான உம்முடைய சமாதானத்துக்குள்ளாக நடத்துவீராக. எனக்கான உம்முடைய சமாதானத்தில் நான் நடக்க அனுதினமும் நான் எடுக்கவேண்டிய அடிகளை எனக்கு காட்டுவீராக.