“சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” – நீதி 10:19
நாமனைவரும் நம்முடைய வார்த்தைகளுக்கு எப்படி எல்லையை வைப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். நீதி 10:19 சொல்வதாவது. வார்த்தைகளின் மிகுதியில் பாவமிராமல் போகாது, ஆனால் நாவை அடக்குகிறவனே ஞானி. வேறு வார்த்தையிலே சொல்ல வேண்டுமென்றால், அதிகம் பேசுகிறவர்கள் பிரச்சினைக்குள்ளாக மாட்டிக் கொள்வார்கள்.
நாம் வார்த்தைகள் அவ்வளவு அதிகமான வல்லமையைக் கொண்டிருப்பதால், நீங்களும் நானும் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். அதை நான் ‘சுருக்கமான பேச்சு’ என்று அழைக்கிறேன். நமக்கு சம்பளம் கொடுக்கும் போது, நம்மில் அனேகர் மொத்த வருமானத்திலே கழிக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் கழித்து விட்டு நிகர் ஊதியத்தை மட்டுமே பெறுவோம். இதையே நம் பேச்சுக்கும் பொருத்திக் கொள்ளலாம்.
உங்கள் பேச்சிலிருந்து சில வார்த்தைகளை, உங்கள் வாயிலிருந்து அவை வரும் முன்பாகவே மாற்றி விட வேண்டும். இது, எதிர்மறையான வாக்கியங்கள், வம்பு, பேச்சு அல்லது கொடூரமானவற்றை தமாஷாகப் பேசுவது போன்றவை இதிலடங்கும். மாறாக பிறரைப் பற்றி நண்மையானதை பேச தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களிலுள்ள நல்ல குணங்களை கண்டறிந்து அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவை பாராட்டுக்குறியதாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும். நீங்களும் பிரச்சினைக்குள்ளாகமாட்டீர்கள்!
ஜெபம்
தேவனே, நான் சுருக்கமாக மட்டும் பேசி, பிரச்சினைக்கு வெளியே இருந்து விட விரும்புகிறேன். என்னுடைய வார்த்தைகளின் எல்லைக்குள்ளே, என் வாழ்கையிலே என்னை பெலப்படுத்தும், உற்சாகப்படுத்தும்.