தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். (தானியேல் 6:10)
தேவனுடைய சத்த்தைக் கேட்கும் போது, அதற்கு நன்றி செலுத்துவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால், துதி மற்றும் ஆராதனையைப் போலவே, அதற்கும் தேவன் பதிலளிக்கிறார். இது அவர் விரும்பும் ஒன்று, அவருடைய இருதயத்தை கவர்ந்த ஒன்று. அப்படி நாம் கடவுளுக்கு மகிழ்ச்சியைத் தரும் வேளைகளில், அவருடன் நம் ஐக்கியம் அதிகரிக்கிறது-அது அவருடன் ஒரு சிறந்த உறவை உருவாக்குகிறது.
நம்மிடம் உள்ளதற்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றால், முணுமுணுக்க வேறு ஒன்றை அவர் ஏன் நமக்கு கொடுக்க வேண்டும்? மறுபுறம், பெரிய மற்றும் சிறிய விஷயங்களுக்கு நாம் உண்மையிலேயே பாராட்டுவதையும், நன்றியுள்ளவர்களாக இருப்பதையும் கடவுள் பார்க்கும்போது, அவர் நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க விரும்புகிறார். பிலிப்பியர் 4:6-ன் படி, நாம் தேவனிடம் கேட்கும் அனைத்தும் நன்றி செலுத்துதலுடன் முன்வைக்கப்பட வேண்டும். நாம் எதற்காக ஜெபித்தாலும், நன்றி எப்போதும் அதனுடன் இருக்க வேண்டும். நமது பிரார்த்தனைகள் அனைத்தையும் நன்றியுடன் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இதற்கு ஒரு உதாரணம்: “என் வாழ்க்கையில் நீர் செய்த அனைத்திற்கும் நன்றி. நீர் அற்புதமானவர், நான் உம்மை மிகவும் நேசிக்கிறேன், பாராட்டுகிறேன்.”
உங்கள் வாழ்க்கையை ஆராயவும், உங்கள் எண்ணங்கள் மற்றும் உங்கள் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தவும், நீங்கள் எவ்வளவு நன்றியை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்க்கவும் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் ஒரு சவாலை விரும்பினால், ஒரு நாள் முழுவதும் புகார் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்றி செலுத்தும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உண்மையில், அதிகமாய் நன்றியுடன் இருங்கள் – மேலும் கடவுளுடனான உங்கள் நெருக்கம் அதிகரித்து வருவதையும், அவர் முன்பை விட அதிக ஆசீர்வாதங்களைப் பொழிவதையும் பாருங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நன்றியறிதலான வார்த்தைகளை பேசுங்கள், புகார் செய்யும் வார்த்தைகளை அல்ல.