“இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.” – தானியேல் 6:3
வேதத்திலே தானியேல் ‘ஒரு சிறந்த ஆவியைக் கொண்டிருந்தான்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. என்ன நடந்தாலும் சரி அவன் தேவனை மகிமைப்படுத்தவே வாழ்ந்தான்.
தானியேல் தேவனை நேசித்தான். அவரை சேவிக்கும் அவனுடைய அர்ப்பணிப்பிலே அவன் மாறவே இல்லை. அதன் விளைவாக தேவன் அவனுக்கு ராஜாவினுடைய தயை கிடைக்கும் படி செய்தார். அது அந்த நாட்டிலே இருந்த மற்ற தலைவர்களுக்கு மேலான பதவி உயர்வைக் கொடுத்தது. ஆனால் தேவன் பேரிலே இருந்த அவனுடைய அர்ப்பணம் சோதிக்கப்பட்டது.
ராஜா தானியேலின் மேல் தயவாய் இருப்பது அந்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் முப்பது நாட்களுக்கு ராஜவைத் தவிர வேறு யாரையும் சேவிக்கக்கூடாதென பிரகனப்படுத்த தந்திரமாக செயல் பட்டனர். அந்த சட்டத்தை மீறினால் சிங்கக் கெபியிலே போடப்படுவார்கள்.
தானியேல் இந்த சட்டத்திற்கு இணங்கவில்லை. அவன், தேவனுக்கான தன் அர்ப்பணிப்பைப் பற்றியே கரிசனையுள்ளவனாய் இருந்தான். உங்களுக்கு அந்த கதை தெரியுமேயென்றால், தேவன் அவனைப் பாதுகாத்தார், இறுதியிலே மகிமைப்பட்டாரென்று அறிவீர்கள்.
அதே மாதிரியான சிறந்த ஆவியுடன் நீங்கள் வாழ வேண்டுமென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனுக்காக வாழ தீர்மாணத்துடன் இருங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் உங்களுடைய உண்மையான நோக்கத்தை நிறைவேற்றி, தானியேலைப் போன்று நீங்கள் செய்யும் அனைத்திலும் தேவனை மகிமைப்படுத்துவீர்கள்.
ஜெபம்
ஆண்டவரே, தானியேலைப் போல ஒரு சிறந்த வாழ்க்கை வாழ என்னை ஒப்புக் கொடுக்கிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் உம்மை சேவிக்க என்னுள் அந்த ‘சிறந்த ஆவியை’ ஊற்றி விடும்.