“ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” – 1 பேதுரு 5:6
இயேசு, நம்முடைய எல்லா கவலைகளையும், பாரங்களையும் அவர் மீது வைத்து விடும்படி அழைக்கிறார். ஆனால் நம்மில் பலர் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? ஒருவேளை, நாம் கவலை மற்றும் பாரங்களை சுமந்து கொண்டிருக்கும் போது, எப்படி பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்வதில்லை.
நம் வாழ்வில் வெற்றியைப் பெறுவதற்கான ஒரே வழி தேவனுடைய ஞானத்தைப் பின்பற்றுவதேயாகும். மேலும் நமக்கு சமாதானம் வேண்டுமென்றால், கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ஆகவே, நாம் கவலைப்பட வேண்டி வரும்போது, நமக்கு தேவனின் உதவி தேவை. அதை எவ்வாறு பெறுவது?
1 பேதுரு 5:6ல் நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும் என்று கூறுகிறது. இது மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் தெரிகிறது. ஆனாலும் சிலர் தொடர்ந்து போராடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் உதவி கேட்பதற்கு மிகவும் கடினமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தாழ்மையானவர்கள் உதவியை பெற்றுக் கொள்கின்றனர். உங்கள் வழி செயல்படவில்லை என்றால், ஏன் கடவுளின் வழியை முயற்சி செய்யக்கூடாது?
நாம் நம்மைத் தாழ்த்தி, தேவனுடைய உதவியைக் கேட்கும்போது, நம்முடைய சூழ்நிலைகளில், அவருடைய வல்லமையை கட்டவிழ்த்து விட அவர் வல்லவராக இருக்கிறார். அப்போது உண்மையில் இந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும். ஆகவே, இன்று உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், உங்கள் கவலைகளை அவர் கவனித்துக் கொள்ளட்டும்.
ஜெபம்
தேவனே, என் வாழ்க்கையை, என்னால் சொந்தமாக சமாளிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எனவே நான் இன்று என்னைத் தாழ்த்தி உம்மிடம், உதவி கேட்கிறேன். நான் உம்மை நம்புகிறேன். என் வாழ்க்கையை நீர் கட்டுப்படுத்த அனுமதிக்கிறேன்.