இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. (யாத்திராகமம் 30:31-32)
என் வாழ்க்கையில் இருக்கும் தேவனுடைய அபிஷேகத்தை (பிரசன்னம் மற்றும் வல்லமை) தவிர ஜன்ங்களுக்கு வழங்குவதற்காய் என்னிடம் எதுவும் இல்லை. நான் ஆடம்பரமானவள் அல்ல; நான் பாடுவதும் இல்லை, மக்களைப் பரவசப்படுத்தும் மற்ற விஷயங்களைச் செய்வதும் இல்லை. நான் தேவனுடைய வார்த்தையில் உள்ள உண்மையைப் பேசுகிறேன். வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், நடைமுறையில் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கும் விவிலியத்தில் இருக்கும் நுண்ணறிவை மற்றவர்களுக்கு நான் வழங்குகிறேன். எப்படி மாற வேண்டும் என்று மக்களுக்கு சொல்கிறேன், அதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் அதிகமாக அனுபவிக்க முடியும், மேலும் ஆவிக்குறிய ரீதியில் எப்படி வளர வேண்டும் என்று நான் அவர்களுக்கு சொல்கிறேன். அவர்களின் அன்றாட வாழ்வில், அவர்களுக்கு உதவும் வழிகளில் நான் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கிறேன். கடவுளின் கிருபையால், இந்த ஊழியம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைகிறது, ஆனால் அவர் என்னைச் செய்ய அழைத்ததைச் செய்ய, நான் தேவனுடைய அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும் – இல்லையென்றால் நான் யாருக்கும் பிரயோஜனமற்றவளாய் இருப்பேன். நான் அன்பில் நடக்கவில்லை என்றால் நான் தேவனுடைய அபிஷேகத்தை சுமக்க மாட்டேன் என்பதைக் கற்றுக்கொண்டேன், ஏனென்றால் கடவுள் மாம்சத்தை (நம் சொந்த ஆசைகள் மற்றும் சுயநல அணுகுமுறைகள் அல்லது நடத்தைகள்) அபிஷேகம் செய்யவில்லை.
பழைய ஏற்பாட்டில் குருமார்கள் மீது அபிஷேகத் தைலத்தை ஊற்றியபோது, அதில் ஒன்றையும் அவர்களின் மாம்சத்தில் பூச முடியாது என்று இன்றைய வசனத்தில் வாசிக்கிறோம். கடவுள் சரீர நடத்தையை அபிஷேகம் செய்வதில்லை. நாம் உண்மையில் அன்பில் நடக்க வேண்டும், ஏனென்றால் அது நம் வாழ்வில் இருக்கும் அபிஷேகத்தை அதிகரிக்க உதவுகிறது, மேலும் தேவன் நம்மைச் செய்ய அழைத்ததைச் செய்ய, அபிஷேகம் நமக்கு அதிகாரம் அளிக்கிறது. கடவுளின் அபிஷேகம் என்பது அவருடைய பிரசன்னமும், வல்லமையும் ஆகும், மேலும் இது போராட்டத்தின் மூலம் நாம் ஒருபோதும் சாதிக்க முடியாததை எளிதாகச் செய்ய உதவுகிறது. நம் அனைவருக்கும் தேவனின் அபிஷேகம் தேவை. தேவனுடைய வேலையில் மட்டும் தான் அபிஷேகம் இருக்க வேண்டுமென்றில்லை.நல்ல பெற்றோராக இருப்பதற்கும், வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வாழ்வதற்கும், நல்ல நண்பர்களாக இருப்பதற்கும், உண்மையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் நமக்கு அபிஷேகம் தேவை.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற கடவுளின் பிரசன்னம் மற்றும் வல்லமை (அபிஷேகம்) மட்டுமே தேவை.