தேவனுடைய கண்களின் மூலம் உங்களைப் பார்க்கும் விசுவாசம்

தேவனுடைய கண்களின் மூலம் உங்களைப் பார்க்கும் விசுவாசம்

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். – 1 யோவாண் 4:4

உங்கள் வாழ்க்கையில், நீங்கள் என்ன சந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்கள் எதிர்காலத்தில் என்ன வர இருந்தாலும், அதற்கான விசுவாசத்தை தேவன் உங்களுக்கு ஏற்கனவே கொடுத்து இருக்கிறார். அது அவ்வாறாக தோன்றாமல் இருக்கலாம். அதை மேற்கொள்ள தேவையானவற்றை நீங்கள் கொண்டிருப்பதைப் போன்று உங்களுக்கு தோன்றாமல் இருக்கலாம். ஆனால் தேவன் மேலிருக்கும் விசுவாசமானது நமது சூழ்நிலைகளையோ அல்லது நாம் எப்படி உணர்கிறோம் என்பதையோ சார்ந்ததாக இருப்பதில்லை.

வாழ்க்கையிலே உங்களுக்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் இல்லை என்றும் நீங்கள் பலவீனமானவர்கள், மிகவும் ஏழை என்று நீங்கள் நம்ப வேண்டும் என்று விரும்புவான். ஆனால் தேவனுக்கு உங்களைப் பற்றிய வேறு கண்ணோட்டம் உண்டு. தேவன் உங்களை அன்பின் கண்கள் மூலமாக பார்க்கிறார். கிறிஸ்துவுக்குள் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று பார்க்கிறார். அவருக்குள்ளாக உங்களால் எப்படி இருக்க முடியும், உங்களுக்குள்ளே எதை முதலீடு செய்திருக்கிறார் – நீங்களும் மற்றவர்களும் பார்க்கிறதை அல்ல.

தேவன் உங்களை பார்க்கும் விதமாக நீங்கள் உங்களை பார்ப்பது, மேற்கொள்ளும் வெற்றியுள்ள வாழ்க்கைக்குள்ளாக உங்களை நடத்தும்.

ஆனால் அதற்கு விசுவாசம் வேண்டும். தேவன் உங்களை நேசிக்கிறார் உங்களை தன் பிள்ளையை போன்று காண்கிறார் என்பதை கேட்பதோடு மட்டுமல்லாமல் விசுவாசிக்கவும் வேண்டும். வாழ்க்கையின் சவால்களை மேற்கொண்டு, முன்னேற விசுவாசம் தேவை. அதை எப்படி அவிழ்த்து விடுவது என்பதை அறியாதிருக்கிறவரை, விசுவாசம் உங்களுக்கு எந்த பலனையும் கொடுக்காது. விசுவாசம் கிரியை செய்ய நீங்கள் அதை கட்டவிழ்த்து விட வேண்டும்.

நாம் நம் வார்த்தைகள், செயல்கள், ஜெபத்தின் மூலமாக விசுவாசத்தை அவிழ்த்து விடுகிறோம். நாம் தான் கிரியை செய்ய வேண்டும். 1 யோவான் 4:14 அதிகமான கிறிஸ்தவர்களால் மேற்கோள்காட்டி சொல்வதாகும். இந்த வசனத்தை சபைகளிலும், கருத்தரங்கிலும் சொல்லும்போதெல்லாம் எல்லோருமே கைகளை தட்டி, உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் எத்தனை மக்கள் உண்மையாகவே உங்களுக்குள்ளே இருக்கிறவர் உலகத்தில் இருப்பவனிலும் பெரியவர் என்பதை நம்புகின்றனர்?

உண்மை என்னவென்றால் உங்களுக்குள்ள இருப்பவர் பெரியவர். அவர் உங்களை நேசிக்கிறார். எனவே உங்கள் விசுவாசத்தை விரிவாக்கி, தேவன் உங்களை பார்ப்பதைப் போன்று பாருங்கள். நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று சத்துரு விரும்பினாலும், அல்லது காரியங்கள் எப்படி காணப்பட்டாலும் சரி, நமக்குள்ளே வாசம் பண்ணும் அவராலே நம் விசுவாசம் மேற்கொள்ளும்


ஜெபம்

தேவனே, நீர் என்னை நேசிக்கிறீர் என்றும், மேற்கொள்ள வல்லமையை கொடுத்திருக்கிறீர் என்றும் நம்புகிறேன். உம்முடைய பிள்ளையாக நீர் எனக்குக் கொடுத்திருக்கும் விசுவாசத்திலே, ஒவ்வொரு நாளும் உம்மை நம்பி என் வழியிலே வரும் எந்த தடங்கல்களையும் தாண்டி மேற்கொண்டு நடப்பேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon