தேவனுடைய பிரசன்னத்திற்குள் சென்று அவரைத் துதியுங்கள்

தேவனுடைய பிரசன்னத்திற்குள் சென்று அவரைத் துதியுங்கள்

அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்! (சங்கீதம் 100:4)

தேவனுடைய சத்தத்தைக் கேட்க, நம்மை நாமே தயார் செய்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று முழு இருதயத்தோடும் அவரைத் துதிப்பது. தம்மை உண்மையாகத் துதித்து வழிபடும் மக்களுக்குத், தம்முடைய பிரசன்னத்தையும், வல்லமையையும் வெளிப்படுத்துவதில் கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அவருடைய பிரசன்னமும், வல்லமையும் வரும் போது, நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம், அற்புதங்களைக் காண்கிறோம், குணமடைகிறோம், வாழ்க்கை மாறுகிறது. மேலும் மாற்றம் உள்ளே இருந்து நடைபெறுகிறது.

தேவனுடனான உங்கள் உறவில், நீங்கள் விரும்புவதில் இது ஒரு பகுதியாக இல்லையா? நீங்கள் அவருடன் பேசும் போதும், அவருடைய சத்தத்தைக் கேட்கும் போதும், உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு பகுதியில் சில வகையான மாற்றம் அல்லது மாற்றங்களை நீங்கள் விரும்புவதால், அதற்காக நீங்கள் முதன்மையாக ஜெபிக்கவில்லையா? ஒரு புதிய வேலையை வழங்குமாறு நீங்கள் அவரிடம் கேட்டால், அது மாற்றம். அன்பிற்கினிய ஒருவர் தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், அதுவே மாற்றம். கடவுளை உங்களுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் படியும், ஆவிக்குறிய முதிர்ச்சியில் நீங்கள் வளர உதவுமாறும், நீங்கள் அவரிடம் கேட்கிறீர்கள் என்றால், அதுதான் மாற்றம். தெருவில் வசிக்கும் வாலிபர், போதைப் பொருள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், அதுதான் மாற்றம். உங்கள் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க உதவி செய்ய வேண்டுமென்று கடவுளிடம் நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், அதுதான் மாற்றம்.

நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்தாலும், அதைத் தொடங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று துதி மற்றும் ஆராதனை. அது உங்கள் இருதயத்தை கடவுளுக்கு முன்பாக வைத்து, அவருடைய சத்தத்தைக் கேட்கவும், மாற்றம் ஏற்படவும் வழி செய்யும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் கடவுளின் சத்தத்தைக் கேட்க வேண்டியிருக்கும் போது, அவரைத் துதித்து அவருக்கு ஆராதனை செய்யுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon