“அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” – எபி 6:19
நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடினமான காலங்களை கடந்து செல்கிறோம். புயலில் சிக்கிக் கொண்ட ஒரு கப்பலைப் போல இருக்கும் நாம், சீராக இருக்க நமக்கு உதவி தேவை. ஒரு கப்பல் நிலையாக நிறுத்தப் பட அதற்கு நங்கூரம் தேவை. நம்முடைய ஆத்மாவின் நங்கூரம் நம்பிக்கை என்று வேதம் கூறுகிறது.
நீங்களும், நானும் நமது நம்பிக்கையை தேவன் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் வைக்கும் போது, நாம் காற்றையும், அலைகளையும் உணரலாம், ஆனால் இறுதியில் நாம் அசைக்கப்பட மாட்டோம். ஒரு புயலின் போது, நம்பிக்கையானது, காரியங்கள் நன்றாக இல்லாத போதும், சிறந்த காரியம் நடைபெறும் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகும். இது உங்களுக்கும் எனக்கும் விஷேசமாக கஷ்ட காலங்களில் ஒரு வல்லமையான முக்கியமான தண்மையாக மாறுகிறது. உண்மையில், நம் விசுவாசம் நாம் கட்டியெழுப்ப வேண்டிய உண்மையான அடித்தளம் என்று நான் நம்புகிறேன்.
ஏமாற்றத்தையோ, சிக்கலையோ நாம் ஒருபோதும் சந்திக்க மாட்டோமென்று தேவன் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை. ஆனால் முக்கியமானது என்னவென்றால், நாம் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்க வேண்டும். ஒரு நேர்மறையான மனப்பான்மையை கொண்டிருந்து, கிறிஸ்துவில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிடித்துக் கொள்வது, கடவுளின் அதிசய வல்லமையைக் காணும் நிலையில் நம்மை நிலை நிறுத்துகிறது.
ஜெபம்
தேவனே, நான் என் நம்பிக்கையை உம் மீது வைக்கிறேன். உம் மீதுள்ள நம்பிக்கையும், என் வாழ்க்கையில் நீர் செய்யப்போகும் பெரிய காரியங்களின் எதிர்பார்ப்புமே எனது நங்கூரம்.