
அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடைய வர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். (மல்கி 3:3)
பல வருடங்களைத் திரும்பிப் பார்க்கையில், நான் கடவுளோடு ஒரு அற்புதமான பயணத்தில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறேன். அவர் நிச்சயமாக என்னை மாற்றி விட்டார். இன்னும் என்னை தினமும் மாற்றி வருகிறார். என் ஆத்துமாவில் (என் மனம், சித்தம் மற்றும் உணர்ச்சிகள்) எனக்குப் பல பிரச்சனைகள் இருந்தன. அந்த நேரத்தில் நான் பரிசுத்த ஆவியின் முழுமையை பெற்றேன். என் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை நான் சிறிதும் உணரவில்லை. நான் மாற்றத்திற்காக கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் என் வாழ்க்கையில் மாற்றப்பட வேண்டியது நான் தான் என்பதை நான் அறியாமல் இருந்தேன்!
கடவுள் என்னுள் ஒரு செயல்முறையைத் தொடங்கினார்-மெதுவாக, சீராக, என்னால் தாங்கக்கூடிய வேகத்தில். ஒரு சுத்திகரிப்பாளராக, அவர் நம் வாழ்வில் எரியும் நெருப்பின் மீது அமர்ந்து, அவை ஒருபோதும் அதிக வெப்பமடையாமல் இருப்பதையும், அவை அழியாமல் இருப்பதையும் உறுதிசெய்கிறார். அவர் நம்மில், அவருடைய பிரதிபலிப்பைப் பார்க்கும் போது மட்டுமே நெருப்பை அணைப்பது பாதுகாப்பானது. அப்போதும் கூட, சில நேரங்களில் சில மாற்றங்கள் நமக்குத் தொடர்ந்து தேவைப்படும்.
கடவுள் என்னுடன் பொறுமையைக் கையாளும் போது, நான் பொறுமையாக அல்லது மோசமாக நடந்து கொள்ளக்கூடிய பல சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டேன். அடிக்கடி, நான் மோசமாக நடந்து கொண்டேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னைக் கண்டித்து, எனக்குக் கற்பித்து, கடவுளின் மகிமைக்காக நான் வாழ ஆசைப்பட்டார். படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக, நான் ஒரு பகுதியில், பின்னர் மற்றொரு பகுதியில் மாறினேன். நான், போராட்டங்களுக்கு இடையில் சிறிது ஓய்வெடுக்க வேண்டியிருந்த்து. நான் இறுதியாக பட்டம் பெற்றேன், நான் கற்றுக் கொள்ள வேண்டிய வேறு ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக.
பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றும்போது இதுவே செயல்படுகிறது. அவரது தலைமைக்கு உங்கள் இருதயத்தைத் திறந்து வைத்திருங்கள்; அவருடைய சத்தத்திற்கு உங்கள் காதுகளைத் திறந்து வைத்திருங்கள்; அவர் உங்களிடம் பேசுவதைக் கடைப்பிடியுங்கள் – விரைவில், அவர் உங்களை உருவாக்கிய நபராக நீங்கள் மேலும் மேலும் மாறுவதைக் காண்பீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள், மாற்ற வேண்டிய பகுதிகளை உங்களுக்குக் காட்டும்போது சோர்வடைய வேண்டாம்.