
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” – கலா 2:20
பவுல் தான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டிருப்பதாக கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், தேவனுக்காக வாழ, அவர் தம்மை பற்றி நினைப்பதை நிறுத்த வேண்டும் என்பதே. நாமும் அப்படியாக செய்ய ஊக்குவிக்கப்படுகிறோம்.
இந்த தருணத்திலே நீங்கள் என்னைப் பற்றி என்ன? யார் என்னைப் பார்த்துக் கொள்வார்? என்று எண்ணிக் கொண்டிருக்கலாம், இதுதான், நாம் தேவன் நம்மை எப்படி வாழ வேண்டுமென்று சொல்லுகிறாரோ அப்படி வாழ்வதை தடுக்கிறது.
நாம் என்ன விரும்புகிறோம், நினைக்கிறோம், உணர்கிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது சுலபமானதே. ஆனால் உங்களுக்காக வாழ்வது உண்மையிலேயே விரக்தியடைய செய்யக்கூடிய, வெறுமையாய் வாழும் வழிமுறையாகும். தேவன் நோக்கமாக இருப்பதும், பிறருக்காக என்ன செய்யலாம் என்று நோக்குவதும், நமக்கு என்ன தேவையோ, விருப்பமோ அதை குறித்த பயத்தினின்று நமக்கு விடுதலையைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.
சந்தோசத்தைக் கொண்டிருப்பதற்கான இரகசியம், நம் வாழ்க்கையை வைத்துக் கொள்ள முயற்சிப்பதில் அல்ல, அதை விட்டு கொடுப்பதில் தான் இருக்கிறது. உங்கள் மேலிருக்கும் கவனத்தை நீங்கள் தேவன் மேல் திருப்பும் போது, ஒரு உண்மையான அர்த்தமுள்ள வாழ்வை எப்படி வாழ்வது என்பதை காண்பிப்பார்.
உங்களை தேவனுக்கு அர்ப்பணிப்பதின் மூலம் உங்கள் நாட்களை நீங்கள் தொடங்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அப்படி நீங்கள் செய்யும் போது ஒரு தேவனுக்கேற்ற வாழ்க்கையை நீங்கள் வாழ அவர் உங்களுக்கு உண்மையாய் உதவுவார்.
ஜெபம்
தேவனே, என் கண்களை, காதுகளை, வாயை, கைகளை, கால்களை, இருதயத்தை, பொருளாதாரத்தை, வரங்களை, தாலந்துகளை, திறமைகளை, நேரத்தை, பெலத்தை, ஆற்றலை எல்லாவற்றையும் உம்மிடம் கொடுக்கின்றேன். நான் எனக்காக வாழ விரும்பவில்லை, உமக்காகவே வாழ விரும்புகிறேன்.