“தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” – சங்கீதம் 56:4
நீங்கள் விளையாடி சோர்வடைந்து விட்டீர்களா? முகமூடி அணிந்து கொண்டிருக்கிறீர்களா அல்லது உங்களைத் தவிர வேறு ஒருவராக இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இராமல் வேறொருவரைப் போல் இருக்க வேண்டும் என்ற அழுத்தத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் தனித்துவத்தை எவ்வாறு தழுவுவது மற்றும் எல்லோரையும் போல இருக்க இழுக்கப்படுவதை எதிர்ப்பது எப்படி என்பதை அறிய விரும்புகிறீர்களா?
நீங்கள் பாதுகாப்பின்மையை மேற்கொண்டு, தேவன் உங்களை எப்படி இருக்க வேண்டுமென அழைத்தாரோ அப்படி இருக்க உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். நம்முடைய தனித்துவத்தை நிராகரித்து ஒருவரைப் போல இருக்க முயற்சிக்கும்போது மகிழ்ச்சியின்மையும், விரக்தியும் ஏற்படுகிறது. தேவன் உங்களை எப்படியாக இருக்க வேண்டுமென்று விரும்பினாரோ அதை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ முயற்சிப்பதை விட்டு விட்டு, நான் மனுஷரை பிரியப்படுத்த முயற்சிக்கிறேனா அல்லது தேவனைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறேனா என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாம் மனுஷரை அல்ல, தேவனை மகிழ்விப்பதில் கவனம் செலுத்தும்போது, வாழ்க்கையில் உண்மையான சமாதானமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அவர் உங்களை உருவாக்கியபோது, அவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்திருந்தார். நீங்கள் ஒரு தனித்துவமான தனிநபர்- அற்புதமாக உருவாக்கப்பட்டவர்! கிறிஸ்து இயேசுவில் உங்களை ஒரு புதிய சிருஷ்டியாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, நான் மனிதனுக்கு அஞ்ச மாட்டேன். உம்முடனான எனது உறவில் எனது பாதுகாப்பையும், நம்பிக்கையையும் கண்டுபிடிக்க விரும்புகிறேன். இன்று, நீர் என்னை உருவாக்கிய படி அந்த தனித்துவமான தனிநபராக நான் இருக்க விழைகிறேன். நான் உம்மைப் பிரியப்படுத்த விரும்புகிறேன்.