“மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.” – ரோமர் 8:6
இப்போது நீங்களும் நானும் ஒரு போரின் நடுவிலே இருக்கிறோம். இது ஆவிக்குறிய போராட்டம். இந்த காலத்தின் அந்தகார அதிகாரிகளோடு போராடுகின்றோம். துன்மார்க்க கூட்டத்தோடு போராடுகின்றோம். (எபே 6:12) போரை வெல்ல நமக்கு பரிசுத்த ஆவியானவரின் சிந்தை வேண்டும்.
அனேக விசுவாசிகள் மாம்ச சிந்தையோடு போராடுகின்றனர். ஆனால் நாம் உலகை மாற்றத்தக்க பிரகாரமாக வாழ வேண்டுமென்றால் நாம் மாம்சத்தின் படி வாழ்வதை விட்டு விட்டு ஆவியின் படி வாழ வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நம் மாம்ச இச்சைகளை பரிசுத்த ஆவியானவரின் கட்டுக்குள் கொண்டு வந்து, நம் உணர்ச்சிகளும், மனதும் நம்மை ஆண்டு கொள்ளாத படி தொடர்ந்து நம்மை மாற்றியமைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் போராடிக் கொண்டிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. எனவே இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருக்கின்றது.
இது ஒரு போர். பிசாசு நம்மை வெறுக்கிறான். அவன் நாம் மாம்சத்திற்கு இணங்க வேண்டுமென்று முழு நேரமாக அவன் வேலை செய்து கொண்டே இருக்கிறான். உங்கள் வாழ்விலே யார் ஜெயிக்கிறார் என்பதை நீங்கள் தான் தீர்மாணிக்க வேண்டும். நற்செய்தி என்னவென்றால், நீங்கள் உங்கள் மாம்சத்திற்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஆவியிலே வாழ்ந்து உங்கள் மாம்சத்தை அவரது சித்தத்திற்கு நேராக கொண்டு வரலாம். இன்றே நீங்கள் போரை வெல்லலாம்.
ஜெபம்
தேவனே, இன்று நான் போரை வெல்ல விரும்புகிறேன். ஜீவனும், சமாதானமுமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரின் சிந்தையைக் கொண்டிருக்க விரும்புகிறேன். உம்முடைய ஆவியை இன்றே தெரிந்து கொள்கிறேன். என்னுடைய மாம்சத்தை உம்முடைய சித்தத்திற்கு நேராக கொண்டு வர எனக்கு உதவுவீராக.