
“அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்” – 2 கொரி 12:9
பெலன் அல்லது பெலவீனம்? உங்களைப் பற்றி விவரிக்க இந்த இரண்டு வார்த்தைகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அது எதுவாக இருக்கும்? நம்மில் அனேகர் ‘பெலவீனம்’ என்றே சொல்வோம். ஆனால் நம்முடைய பெலவீனத்தின் நிமித்தமாக தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அறிந்திருக்கிறீர்களா?
உங்கள் பெலவீனத்தை மேற்கொள்ளும் ஒரே வழி தேவனுடைய பெலத்தை சார்ந்திருப்பதாகும். அப்படி செய்வதற்கு, உங்கள் பெலவீனத்தின் மேல் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். நீங்களாக இல்லாத எல்லாவர்றையும், நீங்கள் பார்க்கக் கூடாது. தேவன் என்னவாக இருக்கிறாரோ அவற்றை பார்க்க வேண்டும். அவரது பெலத்திலே கவனம் வைத்து உங்களுக்காக அவர் செய்ய விரும்பும் அனைத்தையும் கவனித்து நோக்குங்கள்.
இந்த உலகத்தின் பெலவீனங்களெல்லாம் உங்களுடைய சுதந்திரமல்ல. நீங்கள் பெலவீனமாகவும், தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்து சிலுவையிலே மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழும்பவில்லை. அவர் உங்களுக்கு ஒரு சுதந்திரத்தையும், இந்த வாழ்க்கையிலே அதிகாரத்தையும், உங்கள் சூழ்னிலைகளை ஆண்டு கொள்ளும் பெலத்தையும் கொடுக்கவே அவை அனைத்தினூடாக அவர் சென்றார்.
நீங்கள் தடுமாறும் எந்த ஒரு பகுதியிலும், தேவன் தம்முடைய பெலத்தை உங்களுக்கு அளிக்க விருப்பமுள்ளவராகவும், ஆயத்தமாகவும் இருக்கிறார். எனவே அடுத்த முறை நீங்கள் உங்களுடைய பெலவீனத்தை உணரும் போது நீங்கள் பெலவீனராயிருக்கையிலே அவர் பெலனாக இருக்கிறாரென்று அறிக்கையிட மறந்து விடாதீர்.
ஜெபம்
தேவனே, நான் பெலவீனமாயிருக்கையிலே நீர் பெலனாயிருக்கிறீர் என்று அறிக்கையிடுகிறேன். எனவே என்னுடைய பெலவீனத்தால் நான் கவலைப்படவோ அல்லது தோற்கடிக்கப்படவோ மாட்டேன். மாறாக என் விசுவாசத்தை உமது பெலத்தின் மீது வைக்கிறேன்.